நெசவுத் தொழிலை ஊக்குவிக்கும் முயற்சி! சென்னையில் நெசவாளர் பயிற்சி மையம் திறந்த தமிழக அரசு!
சென்னை: நெசவாளர்களுக்கான நெசவு பயிற்சி மையத்தை சென்னை கோ- ஆப்டெக்ஸில் தொடங்கி வைத்துள்ளார் அமைச்சர் காந்தி.
கைத்தறி நெசவின் மூலம் தயார் செய்யப்படும் துப்பட்டாக்கள், பைகள், வீட்டு உபயோகத் துணிகள் மற்றும் தோடர் கை வேலைபாடு துணி ரகங்கள் உள்ளிட்ட பிரத்யேகமான கைத்தறி விற்பனை செய்ய கோ-ஆப்டெக்ஸில் கைத்தறி அலங்கார பொருட்கள் விற்பனை நிலையம் (Handloom Accessories Shop) இன்று திறந்து வைக்கப்பட்டது.

இளம் கைத்தறி நெசவாளர்களுக்கான நெசவு பயிற்சி மையம் நெசவு தொழில் சார்ந்த தொழில் முனைவோராக மாற்றுவதற்காகவும்,சென்னை கோ-ஆப்டெக்ஸில் நெசவாளர் பயிற்சி மையம் அமைச்சர் காந்தியால் துவக்கி வைக்கப்பட்டு 20 நபர்களுக்கு பயிற்சி சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.
கைத்தறி துணி ரகங்களை மதிப்பு கூட்டி உள்நாட்டில் சந்தைப்படுத்துவது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய கூடிய வகையில் கைத்தறி இரகங்களுக்கு அதிக விற்பனை விலை ஈட்டும் பொருட்டு,கைத்தறி துணி 1) எம்ப்ராய்டரி பயிற்சி மையம், 2) கைத்தறி துணி அச்சிடுதல் பயிற்சி மையம், 3) கைத்தறி துணி சிக்கன்காரி எம்ப்ராய்டரி பயிற்சி மையம் மற்றும் 4) கைத்தறி துணி ஆரி(AAri) வேலைபாடு பயிற்சி மையம் கோ-ஆப்டெக்ஸில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், காலத்திற்கேற்ப கைத்தறி ரகங்களில் நவநாகரீக வடிவமைப்புகளை உடுத்தும் பொருட்டு தேசிய வடிவமைப்பு மையம், அகமாதாபாத் மற்றும் தேசிய ஆடை அலங்கார வடிவமைப்பு நிறுவனம், பெங்களூரு மற்றும் சென்னை ஆகியவை மூலம் உருவாக்கப்பட்ட 1,000 புதிய வடிவமைப்புகள் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் ஒன்பதாவது தேசிய கைத்தறி திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
மேற்படி புதிய வடிவமைப்புகளில் உருவாக்கப்பட்ட கைத்தறி பட்டு மற்றும் பருத்தி சேலை இரகங்களை வாடிக்கையாளர்கள் தாம் விரும்பும் வடிவமைப்புகளை உண்மையிலேயே தாம் அணிவது போன்று மெய்நிகர் காட்சி மூலம் (Virtual Reality) ஆடைகளை தேர்வு செய்துக்கொள்வதற்கு ஏதுவாக கோ-ஆப்டெக்ஸில் நிறுவப்பட்டுள்ள மெய்நிகர் ஆடை அலங்கார கணினி வசதி மையம் அமைச்சர் காந்தியால் திறந்து வைக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications