பல்கலைக் கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும்- முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
சென்னை: தமிழக பல்கலைக் கழக துணை வேந்தர்களை மாநில அரசே இனி நியமனம் செய்யும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே ஆளுநர் பதவி என்பதே தேவையில்லாதது; ஆட்டுக்கு தாடி போல என விமர்சித்து கலகக் குரல் எழுப்பிய முதல் மாநிலம் தமிழ்நாடுதான். ஆளுநர் என்பவர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறவர். மத்திய அரசின் பிரதிநிதியாக செயல்படுபவர்.
ஆனால் பல்வேறு மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் நிர்வாகத்தில் ஆளுநர்கள் தலையிடுவதால் பெரும் சர்ச்சைகள் தொடரவே செய்கின்றன. தற்போதைய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நாகாலாந்து மாநில ஆளுநராக பதவி வகித்த போது அம்மாநில அரசு நிர்வாகத்தில் தலையிட்டதால் பிரச்சனை எழுந்தது.

மாநில அரசுகள்- ஆளுநர்கள் மோதல்
இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்பட்டதை நாகாலாந்து மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் ஆளுநருக்கும் இடையே உக்கிர மோதல் நிலவுகிறது. மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், டெல்லி என பல மாநிலங்களில் அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் இடையேயான மோதல் தொடருகிறது.

மகாராஷ்டிரா தீர்மானம்
நாடு முழுவதும் பல்கலைக் கழகங்களின் வேந்தர்களாக மாநில ஆளுநர்கள் இருந்து வருகின்றனர். இதனால் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநர்தான் நியமித்து வருகிறார். இந்த நியமனம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி வருகிறது. இதனால் ஆளுநர் அதிகாரத்தை குறைக்கும் நடவடிக்கையை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மேற்கொண்டார். மகாராஷ்டிரா சட்டசபையிலேயே ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

பஞ்சாப் கேரளாவில் மோதல்
பஞ்சாப் மாநில ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக மாநில முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி கூறியுள்ளார். கேரளாவில் கண்ணூர் பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசுக்கும் ஆளுநர் ஆரிப் முகமதுகானுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

முதல்வர் அதிரடி அறிவிப்பு
மேலும் மாநில சுயாட்சிக்காக குரல் கொடுக்கும் தமிழகத்திலும் ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக சட்டசபையில் பாமக தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும்; இது தொடர்பாக மார்ச் மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.
-
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
பினராயி விஜயன் வீட்டில் ED ரெய்டு.. காங்கிரஸ், பாஜகவை ஒரே ட்வீட்டில் விளாசிய ஸ்டாலின்! -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா?












Click it and Unblock the Notifications