அரசு பேருந்துகளில் ரூ10, ரூ20 நாணயங்களை வாங்க மறுக்கும் நடத்துநர்களுக்கு...போக்குவரத்து கழகம் வார்னிங்
சென்னை: தமிழக அரசு பேருந்துகளில் ரூ10, ரூ20 நாணயங்களை வாங்க மறுக்கும் நடத்துநர்கள் மீது நடவடிக்கை பாயும் என போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரிசர்வ் வங்கியால் ரூ10,ரூ20 நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டிருக்கின்றன. ஆனால் ரூ10 நாணயங்கள் செல்லாது என்ற பொதுநம்பிக்கை மக்களிடத்தில் இருந்து வருகிறது.

ரூ10 நாணயம் செல்லும் என அரசு தரப்பு, ரிசர்வ் வங்கி தரப்பில் பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும் பொதுமக்களிடம் ரூ10 நாணயம் குறித்த அச்சம் இருந்து வருகிறது. அரசு போக்குவரத்து கழகங்களிலும் கூட ரூ10, ரூ20 நாணயம் பெறுவதற்கு தயக்கம் காட்டப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள், ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிடும் ரூ.10, ரூ20 நாணயங்கள் சட்டப்படி செல்லத் தக்கவையாகும். பொதுமக்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோர் ரூ.10 நாணயங்கள் குறித்து சந்தேகப்படத் தேவையில்லை. அதேநேரத்தில் ரூ10, ரூ20 நாணயங்களை வாங்க மறுக்கும் தனிநபர் மற்றும் கடை உரிமையாளர்கள் மீது ரிசர்வ் வங்கியால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள முடியாது எனவும் கூறியிருந்தது. அத்துடன் நடவடிக்கைக்கு பதிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடரும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு தரப்பில், அரசு போக்குவரத்து கழகங்களில் ரூ10 நாணயங்களை கட்டாயம் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனை மீறும் நடத்துநர்கள் மீது நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது. தற்போது அரசு போக்குவரத்துக் கழகம் இதே போன்ற மற்றொரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதில், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டிருப்பது 14 வகையான நாணயங்கள். இந்த நாணயங்களை பெற மறுப்பது சட்டப்படி குற்றம். ஆகையால் அரசு பேருந்துகளி நாணயங்களை பெற மறுத்தால் துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் ரூ10, ரூ20 நாணயங்களை கொடுத்தால் அதை வாங்கிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications