தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கு மாநில அளவில் மட்டும் நுழைவுத் தேர்வு; நீட் வேண்டாம்- அமைச்சர் பொன்முடி
சென்னை: தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு மாநில அளவில் மட்டும் நுழைவுத் தேர்வு நடத்திக் கொள்கிறோம்; நீட் தேர்வு நடத்த வேண்டாம் என மத்திய அரசை வலியுறுத்தியதாக தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
மத்திய கல்வி அமைச்சருடன் இன்று மாநில கல்வி அமைச்சர்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சர் பொன்முடி கூறியதாவது:

இன்று சி.பி.எஸ்.இ தொடர்பாகத்தான் விவாதிக்கப்பட்டது. ஜே.இ.இ., ஐசிஆர் (அக்ரி படிப்பு) ஆகிய தேர்வுகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் மற்றும் விவசாய கல்லூரிகளுக்குதான் நடத்தப்படும் என்கிறது மத்திய அரசு.
ஆனால் நீட் தேர்வு என்பது அனைத்து மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகள், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கும் நடத்தப்படும் என்கிறது.
இதனை குறிப்பிட்டு, எப்படி மத்திய அரசின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரி, விவசாய கல்லூரிகளுக்கு ஜே.இ.இ, ஐ.சிஆர். தேர்வுகள் நடத்துவது போல மத்திய அரசின் கீழ் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் நீட் தேர்வு நடத்திக் கொள்ளுங்கள்.
ஆனால் மாநிலங்களின் கீழ் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு முதலில் நடத்தப்பட்டதைப் போல மாநில அளவில் நுழைவுத் தேர்வு நடத்தலாம் என கோரிக்கை வைத்திருக்கிறோம். அந்த கோரிக்கை எந்த அளவுக்கு ஏற்கப்படும் என்பது போகப் போகத்தான் தெரியும். புதிய கல்வி கொள்கையை நாங்கள் ஏற்கப் போவது இல்லை ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டோம். இவ்வாறு அமைச்ச பொன்முடி கூறினார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறுகையில், பிளஸ் டூ தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படும். மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications