அ.தி.மு.க ஆட்சியில்.. தரமற்ற மாஸ்க் வழங்கப்பட்டன.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு குற்றச்சாட்டு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அ.தி.மு.க ஆட்சியில் தரமற்ற முகக்கவசம் வழங்கப்பட்டதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டை மேற்கு பகுதியில் 140-வது வட்ட தி.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மக்களுக்கு நன்றி

மக்களுக்கு நன்றி

அப்போது, சட்டசபை தேர்தலில் வெற்றி பெறச் செய்தமைக்கு பொதுமக்களிடம் மா.சுப்பிரமணியன் நன்றியும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- சுமார் 5,300 குடும்பங்களுக்கு 1.600 ரூபாய் மதிப்புள்ள மளிகைபொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. முகக்சவசம் தான் கொரோனாவுக்கான உடனடி பாதுகாப்பாக அமைகிறது.

தரமற்ற முகக்கவசம்

தரமற்ற முகக்கவசம்

அ.தி.மு.க ஆட்சியில் தரமற்ற முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. மக்களுக்கு N95 என்னும் தரமுள்ள துணியால் முககவசம் வழங்குவது தான் பாதுகாப்பானது. எனவே தமிழ்நாட்டில் தரமுள்ள இலவச முகக்கவசம் வழங்குவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. எனவே மக்களுக்கு விரைவில் தரமுள்ள முகக்கவசம் வழங்கப்படும்.

'மக்களை தேடி மருத்துவம்

'மக்களை தேடி மருத்துவம்

'மக்களை தேடி மருத்துவம்' என்கிற திட்டம் முன்மாதிரியானது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக ஆய்வு மேற்கொள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரிக்கு அதிகாரிகளுடன் நாளை செல்கிறேன். தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு சி.எஸ்.ஆர் மருத்துவமனையுடன் இணைந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கோவையில் நடவடிக்கை

கோவையில் நடவடிக்கை

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு தொற்று பரவாமல் இருப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் உள்ள 13 எல்லை பகுதியிலும் கண்காணிப்பு தீவிர படுத்தப்படுகிறது என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+