சித்த மருத்துவம் மீது ஆளுநருக்கு ஏன் கோபம்? இனியாவது மனது வைப்பாரா? அமைச்சர் மா.சு எதிர்பார்ப்பு!
சென்னை: தமிழரின் பாரம்பரிய சித்த மருத்துவ முறையை ஆளுநர் ஏன் வெறுக்கிறார்? எதற்காக பிடிக்கவில்லை? என தெரியவில்லை என தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும், இனியாவது தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைய ஆளுநர் உறுதுணையாக இருப்பார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு 405 பகுதி சுகாதார செவிலியர்கள் மற்றும் 117 வட்டார சுகாதார மேற்பார்வையாளர்களுக்கான பதவி உயர்வு ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர்," அடுத்து 1479 சுகாதார செவிலியர்கள் பணிக்கான தேர்வுகள் நடைபெற உள்ளது. முதலமைச்சர் தலைமையில் வரும் ஜனவரி மாதம் நேரு விளையாட்டு அரங்கில் பணி நியமனம் வழங்கப்படும்.

தமிழக சுகாதார துறை
தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலோடு கிராம சுகாதார செவிலியர்களாக பணியாற்றி வந்த 405 சகோதரிகளுக்கு பதவி உயர்வு கொடுத்து பகுதி சுகாதார செவிலியர்கள் என்று பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, கர்ப்பிணி பெண்களை பதிவு செய்வது, ஊட்டச்சத்து மருந்து வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர், இந்த அரசு பொறுப்பேற்ற பின் இது போன்ற பதவி உயர்வுகளை தந்து கொண்டுள்ளது.
மா சுப்பிரமணியன்
35,702 புதிய பணி நியமன ஆணைகள் இந்த அரசு பொறுப்பேற்ற பின் இந்த துறை வரலாற்றில் இல்லாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 43,375 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. 16610 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளார்கள். 17,780 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது, 1,12,947 பேர் இந்த துறையில் பயன் பெற்றுள்ளார்கள்.
சித்த பல்கலைக்கழகம்
தமிழ்நாட்டில் சித்த மருந்து பல்கலைக்கழகம் வேண்டும் என இந்த அரசு பொறுப்பேற்ற பின் சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக முதலமைச்சர் ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். ஆளுநர் கிடப்பில் வைத்து நீண்டகால போராட்டத்திற்குப் பிறகு குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார். உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானம், தமிழ்நாட்டிற்கு உயர்கல்வித்துறை, ஆயுஸ் அமைச்சகம் போன்ற பல்வேறு துறைகளுக்கு பல கேள்விகள் கேட்டு உள்துறை அமைச்சகம் திருப்பி அனுப்பியது. அதற்கு சட்ட வல்லுநர்கள் மூலம் பதில் அனுப்பி வந்தோம்.
ஆளுநர் ஆர்என் ரவி
அக்டோபர் 15 ஆம் தேதி இரண்டாம் முறை ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. தற்போது வரை தன்னிடத்தில் வைத்துக் கொண்டிருந்து ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் சித்த மருத்துவமனை அமைய ஆளுநர் உறுதுணையாக இருப்பார் என்று நம்புகிறோம். தமிழர் விரும்பி நேசித்த பாரம்பரிய வைத்திய முறையில் ஒன்று சித்த மருத்துவம். தமிழரின் பாரம்பரிய சித்த மருத்துவ முறையை ஆளுநர் ஏன் வெறுக்கிறார் என்று தெரியவில்லை. ஏன் பிடிக்கவில்லை என்ற காரணமும் தெரியவில்லை. இது உண்மையிலேயே ஒட்டுமொத்த தமிழர்களும் மிகப் பெரிய அளவில் வருத்தப்படும் நிகழ்வு.
எடப்பாடி விமர்சனம்
திமுக அரசு குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்கிறார். அவர் பேசுவது என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். கடந்த காலங்களில் இந்த துறையில் நடந்த விஷயங்களையும் இப்போது நடக்கும் விஷயங்களையும் பொதுவான ஆட்களை வைத்து ஆராயலாம் அல்லது அவர்களை வந்து கேட்டு தெரிந்து கொள்ளலாம். 2026 தேர்தலில் திமுக அகற்றப்படும் என அமித்ஷா கூறுகிறார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தொகுதி வாரியாக 234 தொகுதிகளில் 221 தொகுதிகளில் கூடுதலாக திமுக வாக்கு பெற்று இருக்கிறது. அமித்ஷா போன்றவர்கள் காத்திருக்கலாம். 2026 தேர்தலில் திமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்" என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications