தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்.. இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
2-ம்கட்ட வாக்குபதிவு இன்று தொடங்கியது
சென்னை: உள்ளாட்சி தேர்தலின் 2-ம் கட்ட தேர்தல் இன்று தொடங்கி உள்ளது.. 35 ஒன்றியங்களிலும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது... அமைதியான முறையில் பொதுமக்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. அதில் மொத்தம் 74.37 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

வாக்குப்பதிவு
இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது.. இதில் 9 மாவட்டங்களில் உள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள், 1,324 கிராம ஊராட்சி தலைவர் பதவிகள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 12,376 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக மொத்தம் 6,652 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அறிகுறி
அதன்படி, காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கி உள்ளது.. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.. இதில், மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒருமணி நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், அதற்கான அறிகுறி உள்ளவர்களும் வாக்களிக்க பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் 34 லட்சத்து 65 ஆயிரத்து 724 பேர் வாக்களிக்க உள்ளனர்..

போலீஸ்
2ம் கட்ட வாக்குப்பதிவின்போது போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் உள்பட 40 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த 2 கட்டத் தேர்தல்களிலும் பதிவாகும் வாக்குகள், வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு, வரும் 12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.முன்னதாக, இதற்காகவே பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டன.

வழிபாடு
விழுப்புரம் மாவட்டத்தில், இரண்டாவது கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி, கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றது... மதுரை திருமங்கலத்தில் இடைத்தேர்தலையொட்டி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.. அப்போது, ஊழியர்கள் வாக்குப்பெட்டிகளுக்கு பூஜை செய்து, தேங்காய் உடைத்து வழிபட்டது குறிப்பிடத்தக்கது.

வாக்களித்தார்
தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெப்பை குடியிருப்பில் நடைபெற்று வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, "பத்தாண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குச்சீட்டு முறையில் மக்கள் புரிதலுடன் வாக்களித்து வருகின்றனர்.இது மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றார்.. இந்நிலையில், மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் 10 மணியளவில் வாக்குப்பதிவு நடைபெறுவதை வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆய்வு செய்யயுள்ளார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications