Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உச்சகட்டத்தில் ‘பவார்’களின் ‘பவர்’ சண்டை! தாக்ரேக்களின் தலை தப்புமா? மாற்றம் தருமா மகாராஷ்டிரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சரத்பவார் மற்றும் உத்தவ் தாக்ரே கைக்கு மீண்டும் அதிகாரம் திரும்புமா? கட்சி மீட்கப்படுமா? என்பதற்கு எல்லாம் விடை அளிக்கும் தேர்தலாக இந்த மக்களவைத் தேர்தல் அமைந்துள்ளது.

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் எனத் தீர்மானிக்கப் போகும் 2வது மாநிலம் மகாராஷ்டிரா. அங்கு மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. உபியை அடுத்து இந்த மாநிலம் அதிக தொகுதிகளைக் கொண்டுள்ளது.

TN Lok Sabha Election 2024 A power struggle in the Sharad Pawar family

மொத்தம் 80 தொகுதிகளைக் கொண்டுள்ள உபி முதல் இடத்தில் உள்ளது.

இந்த 2024 மக்களவைத் தேர்தல்தான் உத்தவ் தாக்ரே மற்றும் சரத்பவார் ஆகிய இரண்டு பேரின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது.

அரசியல் சதியால் வீழ்ந்த உத்தவ் தாக்ரேவும் சரத்பவாரும் இம்முறை மீண்டு எழுவில்லை என்றால், இந்த மாநில பாஜகவின் கோட்டையாக மாறிவிடும்.

கடந்த ஏப்ரல் 19 அன்று முதற்கட்ட வாக்குப்பதிவு போது மகாராஷ்டிராவில் உள்ள ராம்டெக், நாக்பூர் ஆகிய 5 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது.

அடுத்து 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலின் போது 8 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. அதனை அடுத்து மூன்று மட்டும் நான்காம் கட்டத் தேர்தல்கள் மே7, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.

TN Lok Sabha Election 2024 A power struggle in the Sharad Pawar family

5 ஆம் கட்டத் தேர்தல் மே 20 ஆம் தேதி அன்று இறுதியாக உள்ள 15 தொகுதிகளுக்கு அங்கே வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

மொத்தம் 6 அரசியல் கட்சிகள் இரண்டு 2 கூட்டணிகள் எனத் தேர்தல் களம் சூடு பிடித்து எரிந்துகொண்டுள்ளது.

இந்த மாநிலத்தில் பாஜக வேட்பாளர்களான நிதின் கட்கரியும் பியூஷ் கோயலும் போட்டியிடுகிறார்கள். சரத்பவாரி மகள் சுப்ரியா சுலே பாராமதி தொகுதியில் போட்டியிடுகிறார். அதன் மூலம் தனது குடும்ப பாரம்பரியத்தை அவர் நிலை நிறுத்த போராடி வருகிறார்.

மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உத்தவ் தாக்ரேவின் சிவசேனா இடம்பெற்றுள்ளது. இக்கட்சியிடம் 6 எம்பிகள் மற்றும் 12 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

சரத்பவாரின் தேசியவாத காங்கிரசும் இதே கூட்டணியில் உள்ளது. இக் கட்சியிடம் 45 எம்.எல்.ஏக்களும் 1 எம்பியும் உள்ளனர். சமாஜ்வாதி பார்டி 2 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

என்.டி.ஏ கூட்டணியில் பாஜகவும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவும் மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசும் உள்ளன.

TN Lok Sabha Election 2024 A power struggle in the Sharad Pawar family

2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தது உடைந்துபோகாத சிவசேனா. அப்போது பாஜக 25 இடங்களில் போட்டியிட்டது. அதில் 23 தொகுதிகளில் வெற்றிபெற்றது. 27.84% வாக்குகளைப் பெற்றது.

உடைந்து போகாத உத்தவ் தாக்ரேவின் சிவசேனா கட்சி மொத்தம் 23 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 18 தொகுதிகளில் வென்றது. பதிவான வாக்குகள் 23.5% . ஆக மொத்தமாக இந்த என்.டி.ஏ கூட்டணிக்கு 41 சீட்டுகள் கிடைத்தன.

யுபிஏ கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் 19 இடங்களில் நின்றது. அதில் 4 தொகுதிகளில் வென்றது. கிடைத்த வாக்குகள் 16.41%. காங்கிரஸ் கட்சி வென்றதோ 1 தொகுதிதான். ஆக, இந்தக் கூட்டணிக்கு மொத்தம் 5 இடங்கள் கிடைத்தன.

அதைத்தவிர அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமின் கட்சி 1 இடத்தில் வென்றது. அமராவதி தொகுதியில் நவ்நீத் கவுர் ராணா சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றார். இவர் 1,992,817 வாக்குகளைப் பெற்றார்.

இவை எல்லாம் பழைய கால பஞ்சாங்க தகவல்.

TN Lok Sabha Election 2024 A power struggle in the Sharad Pawar family

அதன் பின்னதாக வந்த மகாராஷ்டிரா சட்டசபையில் கூட இதே என்.டிஏ கூட்டணியைத் தொடர்ந்தது. பாஜகவுக்கு 105 இடங்கள் கிடைத்தன. சிவசேனாவுக்கு 56 இடங்கள் கிடைத்தன. ஆட்சியமைக்கத் தனிப் பெரும்பான்மைக்கு 145 சீட்டுகள் தேவை. உடனே முதல்வர் கனவுக்கு அடிபோட்டார் உதவ்தாக்ரே. அதனால் இறுதியாகக் கூட்டணி உடைந்தது.

உடனே தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது சிவசேனா. 2019 நவம்பர் மாதம் உத்தவ் தாக்ரே முதல்வரானார்.

ஆனால், 2022 கட்சிக்குள் கலகம் பிறந்தது. ஏக்நாத ஷிண்டே பாஜகவுடன் போய் சேர்ந்தார். கூடவே சிவசேனா கட்சியின் பல எம்.எல்.ஏக்களும் அணி மாறினர். பாஜக ஆதரவுடன் ஷிண்டே முதல்வரானார்.

இந்தக் கட்சி உடைந்தது போலவே மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரசை உடைத்தார் அஜித் பவார். அதன் பின்னர் கட்சியின் நிறுவனரான சரத்பவார் டம்மியானார். இறுதியில் கட்சியே கைநழுவிப் போனது.

இப்போது உத்தவ் தாக்ரேவும் சரத்பவாரும் ஆட்சி அதிகாரத்தை மட்டும் இழந்துவிட்டு நிற்கவில்லை. கட்சியின் உரிமையை இழந்துவிட்டுத் தவிக்கிறார்கள்.

ஆகவேதான் இந்தத் தேர்தல் உத்தவ் தாக்ரேவுக்கும் சரத்பவாருக்கும் வாழ்வா சாவா என்று தீர்மானிக்கப் போகும் தேர்தலாக உள்ளது.

கடந்த 26 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்காக 2ஆம் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அப்போது மகாராஷ்டிராவில் உள்ள புல்தானா, அகோலா, அமராவதி, வார்தா, யவத்மால்-வாஷிம், ஹிங்கோலி, நான்டெட், பார்பானி ஆகிய எட்டுத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி இந்த 8 இடங்களில் 7 தொகுதிகளில் வெற்றிவாகை சூடியது. அமராவதியை மட்டும் சுயேச்சை வேட்பாளர் கைப்பற்றினார்.

ஆனால், இந்த முறை நிலைமை தலைகீழாக மாறி உள்ளது என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். சரத்பவாருக்கு அஜித் பவாருக்கும் இடையிலான குடும்ப சண்டையில் வெல்லப் போவது யார் என்பது தான் டாக் ஆப் த டவுனாக உள்ளது என்கின்றனர்.

ஆனால், அஜித் பவார், 'இது குடும்ப சண்டை இல்லை. அப்படி மீடியாதான் சொல்கிறது. ஆனால், இது மோடியா? ராகுலா என்பதற்கான போட்டி" என்கிறார்.

உங்கள் மீது வங்கி மோசடி உள்ளிட்ட 70 ஆயிரம் கோடி ஊழல் புகார் இருந்து. ஆனால், நீங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தவுடன் அந்த ஊழல் புகார் போய்விட்டது.

பாஜக என்ற வாஷிங்மிஷின் உள்ளே போட்டு வெளுத்ததால் ஊழல் வாதிகள் புனிதமாகி விடுகிறார்கள் என எதிர்க்கட்சிகள் பேசுகிறார்கள் நாடு முழவதும் இதைச் சொல்கிறார்கள் என்று எழுப்பிய கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு, துணை முதல்வ அஜித் பவார், "அந்த விசாரணை முடிந்துவிட்டது. மொத்தம் 70 ஆயிரம் கோடி என்கிறார்கள். மொத்தம் வேலைகள் 42 ஆயிரம் கோடி நடந்து முடிந்துள்ளது. அதில் சம்பளமும் சேர்க்கப்பட்டுள்ளது.

அப்படி என்றால் எப்படி 70 ஆயிரம் கோடி வந்தது என்பதே தெரியவில்லை. இது ஒரு முழுப் பொய்" என்று கூறியுள்ளார்.

ஆனால், சரத்பவார் "குடும்பம் எல்லாம் ஒன்றாகத்தான் உள்ளது. எந்தப் பிரிவு இல்லை. அனைவரும் என்னுடன்தான் உள்ளனர். அஜித் பவார் மட்டும் தனித்து உள்ளார்" என்று கூறியுள்ளார்.

இதைப்போலவே சரத்பவார் மகளும் குடும்பம் பிரியவில்லை. நாடுதான் முக்கியம். கட்சிதான் முக்கியம். பின்புதான் குடும்ப உறவுகள் எல்லாம் என்று கூறியுள்ளார்.

இந்தக் குடும்ப சண்டை ஓய்ந்து மீண்டும் சரத்பவார் கை ஓங்குமா? உத்தவ் தாக்ரே கைக்குக் கட்சியின் அதிகாரம் மீண்டும் கிடைக்குமா? என்பதற்கு எல்லாம் ஜூன் மாதம் முதல் வாரத்தில் விடை கிடைத்துவிடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+