பாகிஸ்தானுக்கு பஸ் விட்டது யார்? நவாஸ் ஷெரீப்புடன் பிரியாணி சாப்பிட்டது யார்? ஆளூர் ஷாநவாஸ் செம பிடி!
சென்னை: மோடி பிரதமராக வரவேண்டும் எனப் பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால், உலகநாடுகள் ராகுல் பிரதமராக வரவேண்டும் என விரும்புகின்றன என்று ஆளூர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலுக்கான 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 7 ஆம் தேதி, அதாவது நாளை நடைபெற உள்ளது. அதாவது அசாம், பீகார், சத்தீஷ்கர், குஜராத், கர்நாடகா என 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஆக மொத்தம் 1351 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த 3 ஆம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சார களத்தில் புதியதாக ஒரு வார்த்தை பிரதமர் மோடியால் கண்டுபிடிக்கப்பட்டது.
அதுதான் 'ஓட்டு ஜிஹாத்'. இதற்கு முன்பாக 'லவ் ஜிஹாத்' என்று பேசி வந்த இந்துத்துவ அரசியல்வாதிகள் இப்போது 'ஓட்டு ஜிஹாத்' என்று பேசி வருகின்றனர் என்று இடதுசாரிகள் கூறியுள்ளனர்.
இந்தக் களத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே 'பாகிஸ்தான்' மற்றும் 'ஓட்டு ஜிஹாத்' ஆகிய வார்த்தைகள் அதிக சர்ச்சையை எழுப்பி உள்ளன.
மோடியின் இந்தப் பிரச்சார யுக்தி குறித்து விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.
பாஜக அரசின் இடஒதுக்கீடு கொள்கை குறித்து 'ஓட்டு ஜிஹாத்' குறித்து ஆளூர் ஷாநவாஸ் அளித்துள்ள பேட்டியில், "நாட்டில் 130 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அதில் 30 கோடிக்கு மேல் இஸ்லாமியர்கள் குடி மக்களாக இருக்கிறார்கள்.
இத்தனை கோடி ஜிஎஸ்டி வரியை வசூல் செய்துள்ளோம் என்று பாஜக அரசு சொல்கிறது. அதில் இஸ்லாமியர்களின் வரியையும் சேர்த்துத்தானே சொல்கிறது? " என்று தொடங்கிய அவர் இடைவிடாமல் பல்வேறு சர்ச்சைகளுக்குப் பதிலளித்து இருக்கிறார்.

தொடர்ந்து பேசிய ஆளூர் ஷாநவாஸ், " அப்படிப்பட்ட இஸ்லாமியர்களை நீக்கிவிட்டு, கார்பரேட் மற்றும் இந்துக்களிடம் மட்டுமே வரியை வசூலித்து வைத்துள்ளோம் என்று சொல்லவில்லையே? அரசியலமைப்புச் சட்டம் படி இஸ்லாமியர்கள் நாட்டி குடிமக்களாகச் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்கிறது.
நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபடும் இஸ்லாமிய மக்களிடம் இருந்து வரியைப் பெற்றுக் கொள்ளக் கூடிய மோடி அரசு அவர்களைப் பற்றி தவறாகப் பிரச்சாரம் செய்கிறது.
காங்கிரஸ் கட்சி அவர்களின் தேர்தல் அறிக்கையில் இஸ்லாமியர்களைப் பற்றி எதையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அப்படி இருந்தும் இந்துக்களிடம் உள்ள செல்வங்களைப் பறித்து இஸ்லாமியர்களிடம் கொடுத்துவிடும் காங்கிரஸ் கட்சி என்று பேசுகிறார் மோடி.
அதற்கு உடனடியாக காங்கிரஸ் 'நாங்கள் இஸ்லாமியர் என்ற வார்த்தையே பயன்படுத்தவில்லையே' என்று வாதப் பிரதிவாதங்களில் இறங்கி உள்ளது.
ஆனால், மத்திய அரசு இதுவரை அமைத்த ஆணையங்கள் என்ன சொல்கின்றன? 'இந்த நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்கள் மற்ற மக்களைப் போலச் சமமாக இல்லை. அவர்கள் மிகவும் மோசமாக உள்ளனர். எஸ்சி, எஸ்டி மக்களைவிட மோசமாக இஸ்லாமியர்களின் நிலைமை பின் தங்கி உள்ளது' என்று சுட்டிக்காட்டி உள்ளன.
ரங்கநாத் மிஸ்ரா குழுவின் அறிக்கையும் சச்சார் கமிட்டி அறிக்கையும் அதைத்தான் சொல்கின்றன. ஏதோ போகின்ற போக்கில் மோடி அடித்துவிடுவதைப்போல இந்த அறிக்கைகள் அடித்து விட்டது இல்லை.
இந்த அறிக்கைகள் அனைத்து இஸ்லாமியர்களின் அவல நிலையைச் சுட்டிக்காட்டி உள்ளன. ஆனால், மோடி, 'பிடுங்கி இஸ்லாமியர்களிடம் கொடுத்து விடுவார்கள்' என்று சொல்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை இல்லையா?
இஸ்லாமியர்களின் பங்களிப்பு நீதித்துறை இல்லை. கல்வித்துறையில் இல்லை. இந்தியக் குடிமைப் பணியில் உரிய அளவு பிரதிநிதித்துவம் இல்லை. சட்டத்துறை இல்லை. துணைவேந்தர்களில் இல்லை. மத்திய அரசு அலுவலகங்களில் உரியப் பிரதிநிதித்துவம் இல்லை. அரசியலில் இல்லை.
இப்படிப் பின் தங்கிக் கிடக்கும் மக்களைப் பார்த்து, இந்த மாதிரியான குற்றச்சாட்டை முன்வைக்கிறார் மோடி.
அதற்காகத்தான் சொல்கிறோம் மக்கள் தொகை கணக்கெடுங்கள். அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற மாதிரி பிரதிநிதித்துவம் கொடுங்கள். அதைச் செய்ய மோடி தயங்குகிறாரே?

உயர்நீதிமன்றங்களுக்கான நீதிபதி பணிகளுக்காக 650 நியமனங்கள் நடந்துள்ளன. அதில் 450க்கும் மேல் உள்ளவர்கள் உயர்சாதி இந்துக்கள். மீது உள்ளதுதான் ஓபிசி, பிசி, எஸ்சி, எஸ்டி இந்துக்கள் உள்ளனர்.
இவர்கள் எத்தனை சதவீதம்? 2 அல்லது 3 சதவீதம்தான். நாட்டில் 3 சதவீதம்தான் பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளனரா? நாட்டில் 3 சதவீதம் உள்ளவர்கள் எப்படி 90% நீதிபதி பதவிகளில் உள்ளனர்? அதில் கொடுமை என்னவென்றால், இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவம் இந்தப் பட்டியலில் ஒரே ஒருவர்தான்.
இதில் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தினால், இத்தனை உயர்சாதியினர்களை நீதிபதிகளாக நியமனம் செய்ய முடியுமா? பலரது இடங்களைப் பறித்துக் கொண்டு அனுபவிப்பவர்கள் யார்? அந்த உண்மைகளை எல்லாம் மறைக்கத்தான் மோடி இப்படிப் பேசி வருகிறார்.
நாட்டில் ஏதோ மத அடிப்படையில் இடஒதுக்கீடு இல்லாததைப் போல் பேசுகிறார் மோடி. மத அடிப்படையில்தானே இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது.
ஓபிசி, பிசி, எஸ்சி,எஸ்டி என அனைவருக்கும் இந்து மத அடிப்படையில்தானே இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் எல்லாம் என்ன திராவிடர் கழகத்திலா இருக்கிறார்கள்? இந்து மதத்தில் தானே உள்ளனர்?
அப்படி உள்ளபோது ஏதோ இஸ்லாமியர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு கொடுத்துள்ளதைப் போல மோடி பேசுவது ஏன்?
இந்தியாவிலிருந்த அத்தனை பொதுத்துறை நிறுவனங்களையும் மோடி தனியாருக்கு விற்று விட்டார். இனி அரசு நிறுவனங்களே இல்லை. அப்புறம் எதற்கு இடஒதுக்கீடு. அதை எங்கே நடைமுறைப்படுத்துவது? தனியார் கம்பெனிகளிலா? மோடி ஆட்சியில் எஸ்சி, எஸ்டி இந்து மக்களை எத்தனை அரசுப் பணிகளில் அமர்த்தி உள்ளார் மோடி? வெள்ளை அறிக்கை தர முடியுமா?
காங்கிரஸ் பல பொதுத்துறை நிறுவனங்களைத் தொடங்கியது. மோடி அத்தனை நிறுவனங்களையும் விற்றுவிட்டார். பிறகு எதற்கு இடஒதுக்கீடு? வெறும் காகிதத்தில் வைத்துக் கொண்டு என்ன செய்வது? " என்று பேசியுள்ளார்.
அவரிடம் பாகிஸ்தான் ராகுல் பிரதமராக வரவேண்டும் என விரும்புவதாக மோடி கூறியுள்ளாரே? அது குறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ஷாநவாஸ், "பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு பஸ் விட்டது யார்? திடீரென்று நவாஸ் ஷரீப்புடன் உட்கார்ந்து பிரியாணி சாப்பிட்டது யார்? ராகுல் காந்தியா போனார்? பாஜக வாஜ்பாய் ஆட்சியில்தான் பஸ் விடப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் விடப்படவில்லை. மோடிதான் பாகிஸ்தானுடன் நட்புறவு வைத்துள்ளார். ராகுல் வைக்கவில்லை?
ராகுல் வரவேண்டும் என்று உலகமே விரும்புகிறது. மோடி பிரதமராக வர வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது.
இங்கு மோடி மத விசயங்களைக் கூர்மைப்படுத்துவதைப் போலப் பாகிஸ்தானில் உள்ளவர்கள் அங்கே மத விசயத்தைக் கூர்மைப்படுத்துகிறார்கள். ஆகவே மோடிக்குத்தான் பாகிஸ்தானுடன் உறவு உள்ளது.
வெறுப்பு அரசியல் செய்வோரை வைத்துத்தான் இன்னொரு வெறுப்பு அரசியலைக் கட்டமைக்க முடியும்? ராகுல் வெறுப்பு அரசியல் செய்யவில்லையே" என்று அடுக்கடுக்கான கேள்விகளை அள்ளி அடுக்கி உள்ளார் ஷாநவாஸ்
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications