Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காஷ்மீரில் பயந்து பின்வாங்கிய பாஜக? ஒரு தொகுதியில் கூட போட்டியிடாதது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள பாஜக காஷ்மீரில் ஒரு வேட்பாளர்களைக்கூட நிறுத்தவில்லை. ஆனால், அங்கே காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

2024 மக்களைவைத் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது. நாடு முழுவதும் 420 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

TN Lok Sabha Election 2024 BJP not contesting even a single constituency in Kashmir

ஆனால், இந்தக் கட்சி காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரு தொகுதியில் கூட வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்ற செய்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

2019 பாஜக ஆட்சிக்கு வந்ததும் அதிரடியான சில நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதில் ஒன்றுதான் காஷ்மீர் மாநிலத்திற்கு என்று வழங்கப்பட்ட சட்டப்பிரிவை 370 ஐ ரத்து செய்தது. இதைச் செய்து மிகப்பெரிய சாதனை என்றும் பாஜக கூறிவந்தது.

இவ்வளவு பெரிய சாதனையைச் செய்துவிட்டு, அங்குள்ள 3 தொகுதிகளில் ஒரு வேட்பாளரைக் கூட நிறுத்துவதில்லை என்று பாஜக தேசிய தலைமை முடிவெடுத்துள்ளது. இந்த முடிவுக்குக் காஷ்மீர் பகுதி பாஜகவினரிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது.

காஷ்மீர் மாநிலத்தில் நடைமுறையிலிருந்த 370 சட்டப் பிரிவை பாஜக அரசு நீக்கி 4 ஆண்டுகளுக்கு மேலாகி வருகிறது. இந்த 4 ஆண்டுகளில் கட்சியைப் பலப்படுத்துவதற்காக வீடுவீடாக சென்று இக்கட்சியின் நிர்வாகிகள் தங்களுக்கான ஆதரவைத் திரட்டி வந்தனர். உள்ளூரில் மிகக் கடுமையாகக் கட்சிப் பணிகளைச் செய்து வந்தனர்.

TN Lok Sabha Election 2024 BJP not contesting even a single constituency in Kashmir

இந்த முறை எப்படியும் மக்களவைத் தேர்தலில் காஷ்மீர் பாஜக தேர்தல் களத்தில் நிற்கும் என்றும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அப்படியான நேரத்தில்தான் அவர்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது பாஜக தேசியத் தலைமை.

காஷ்மீரில் உள்ள 3 தொகுதிகளில் ஒன்றில் கூட வேட்பாளர்களை நிறுத்தாத பாஜக, ஜம்மு பகுதியில் மட்டும் 2 வேட்பாளர்களைக் களம் இறங்கியுள்ளது. அதற்குக் காரணம் தனியே தேடித் தேவையில்லை.

காஷ்மீர் அதிக இஸ்லாமியர்களைக் கொண்ட பள்ளத்தாக்குப் பகுதி. ஜம்மு அப்படி அல்ல. அங்கே இந்துக்கள் அதிகம். ஆகவே வேட்பாளர்களை அறிவித்துள்ளதில் மிகப்பெரிய ரகசியம் ஒன்று இல்லை என்று அப்பகுதியினர் கருத்து கூறியுள்ளனர்.

டெல்லிக்கும் காஷ்மீருக்குமான தொடர்பு என்பது பல ஆண்டுகளைக் கொண்டுள்ளது. அந்த மாநிலத்துடனான உறவைக் காங்கிரஸ் சீரான நிலையில் கையாண்டு வந்தது.

ஆனால், பாஜக அரசு 2019இல் ஆட்சிக்கு வந்தது 370 சட்டப் பிரிவை ரத்து செய்ததுடன் லடாக் பகுதியைத் தனி யூனியன் பிரதேசமாகவும் ஜம்மு காஷ்மீரைத் தனியாகப் பிரித்து இரண்டு கூறுகளாக்கியது. இதனால் அம்மாநிலத்தின் அமைதி கேள்விக்குறியானது. வழக்கத்திற்கு அதிகமாக ராணுவம் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

TN Lok Sabha Election 2024 BJP not contesting even a single constituency in Kashmir

அம்மாநிலத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் உட்பட நூற்றுக்கும் மேலான தலைவர்களைப் பல மாதங்கள் வரை வீட்டுக்காவலில் வைத்தது மத்திய அரசு. அதை நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் கடுமையாக எதிர்த்தனர். வைகோ நாடாளுமன்றத்திலேயே மிகக் கடுமையாக உரையாற்றினார்.

உடனடியாக வீட்டுக்காவலில் உள்ள தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்த போது, உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'அப்படி யாரும் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்படவில்லை' என்று மறுத்து வந்ததுடன், தங்களது ஆட்சியில்தான் காஷ்மீருக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது என்று பேசி வந்தார்.

அமித்ஷாவின் கூற்றுப்படி இந்தளவுக்குச் சுதந்தரம் கொண்டு வரப்பட்ட காஷ்மீர் பகுதியில் உள்ள 3 தொகுதிகளில் பாஜக 1 தொகுதியில் கூட போட்டியிடாதது ஏன்? என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

அதுவும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டு, நடைபெறுகின்ற முதல் மக்களவைத் தேர்தல் இது. அப்படி ஒரு முக்கியமான தேர்தலில் பாஜக ஏன் பின் வாங்கிக் கொண்டது என்றும் சில கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் ஜம்மு காஷ்மீர் பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் சுனில் சேத், "தேர்தல் முக்கியமல்ல; மக்களின் மனங்களை வெல்வதே எங்களின் முக்கிய நோக்கம்.

TN Lok Sabha Election 2024 BJP not contesting even a single constituency in Kashmir

காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் முழுமையாக ஒருங்கிணைக்க எங்களுக்கு 75 ஆண்டுகள் ஆகியுள்ளது. தேர்தலில் இடங்களை வெல்வதற்காகச் சட்டத்தை ரத்து செய்தோம் என்ற எண்ணத்தை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை" என்று கூறியுள்ளார்.

ஆனால், காரணங்கள் மிக வெளிப்படையாக உள்ளன. இங்கே சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை மக்கள் யாரும் ஏற்கவில்லை. ஆகவே பாஜக இங்கே போட்டியிட்டால் கட்டுத் தொகையைக் கூடப் பெற முடியாது. அதுவே உண்மை நிலை. இதை பாஜகவும் அறியும். அதை மறைக்க இந்தக் கம்பிகட்டும் கதைகளை அவிழ்த்துவிடுகிறார்கள் என்று அப்பகுதி அரசியல் விமர்சகர்கள் பலர் கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஃபரூக் அப்துல்லாவின் ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியைத் தவிர, மக்கள் ஜனநாயகக் கட்சி (PDP), மக்கள் மாநாடு (PC) மற்றும் ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி ஆகியவை தேர்தல் களத்தில் உள்ளன.

இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசும் போட்டியிடுகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை ஆண்டு வந்த தேசிய கட்சியான பாஜக, இங்கே வேட்பாளர்களை அறிவிக்க அச்சம் கொண்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+