சூரத் தொகுதியில் பாஜக வெற்றி.. அப்பட்டமான சதி! அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் ஷாம்!
சென்னை: சூரத் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவித்தது மிகப்பெரிய சதி என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வாகி உள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார். அதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திகூட கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

குஜராத் மாநிலம் சூரத் தொகுதி என்பது பாஜகவின் கோட்டையாகவே பார்க்கப்படுகிறது. இந்தத் தொகுதியில் ஏற்கெனவே பாஜக 9 முறை வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2014, 2019 ஆகிய தேர்தல்களில் சூரத் தொகுதியில் பாஜக சுமார் 75% மற்றும் 76% வாக்குகளைப் பெற்றிருந்தது. இந்த 2024 தேர்தலுக்காக முகேஷ் தலால் பாஜகவின் வேட்பாளராக வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி உள்ளிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் சிலரும் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார்கள்.
ஆனால் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் மற்றும் காங்கிரஸ் மாற்று வேட்பாளர் ஆகியோரின் வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார். அதனையடுத்து சுயேச்சை வேட்பாளர்களும் தங்களின் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில்தான் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
தேர்தல் அதிகாரியின் இந்தச் செயல் குறித்து பல்வேறு புகார்களை எதிர்க்கட்சியினர் எழுப்பி வருகின்றனர்.

சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வானது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.
இது குறித்து ஒரு யூடியூப் தளத்தில் பேசியுள்ள ஷ்யாம், "10 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் காங்கிரஸ் வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விடுகிறது. மற்ற 8 பேர் மனுவை வாபஸ் வாங்கிக் கொள்கிறார்கள்.
மீதம் இருந்தது பாஜக ஒரே வேட்பாளர்தான். ஆகவே அவர் போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனு சரியாக இல்லை என்பதற்காக மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் தமிழ்நாட்டில் போட்டியிட்ட அண்ணாமலை நீதிமன்றம் பயன்படுத்தக்கூடிய பத்திரத்தாளில் வேட்புமனு தாக்கல் செய்தார். அது சர்ச்சையானது.
ஆனால் அதை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டார். அப்படி என்றால் அண்ணாமலை மனு சரியானதா?
இப்போது குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்துள்ளது மிகப்பெரிய சதி என்றுதான் சொல்ல வேண்டும். அதில் மாற்று வேட்பாளராக பாஜக சார்பில் நிறுத்தப்பட்டவரை கூட நிராகரித்து இருக்கிறார்கள் என்பதுதான் விநோதம்.
தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தனது சார்பாக ஒரு மாற்று வேட்பாளரைப் போடுவார்கள். அப்படி பாஜக சார்பாக போட்ட வேட்பாளரைக் கூட சூரத்தில் நிராகரித்திருக்கிறார்கள்.
இந்தமுறை தேனி தொகுதியில் போட்டியிடும் தங்கதமிழ்ச்செல்வன் 2001 தேர்தலின் போது ஜெயலலிதாவுக்கு மாற்று வேட்பாளராக போடப்பட்டார். அன்றைக்கு ஜெயலலிதா வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

உடனே மாற்று வேட்பாளரான தங்கதமிழ்ச்செல்வன் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர் போட்டியிட்டார். அவர் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார். அதன்பின்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அப்படிப் பார்த்தால் சூரத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மனுவை நிராகரித்தது ஏன்? அப்படிப் பார்த்தால், காங்கிரஸ் கட்சியின் மாற்று வேட்பாளர் மனுவை ஏன் நிராகரித்தார்கள்? அதுதான் புரியாத புதிராக உள்ளது. அப்படிப் பார்த்தால் இது சதி என்பது புரிகிறது.
குஜராத்தை பொறுத்தவரை பாஜக படிப்படியாக பலவீனமடைந்து வருகிறது. குஜராத்தில் பாஜக 5 தொகுதிகளை இந்த முறை இழந்தால் கூட, அது தேசிய அளவில் மிகப்பெரிய செய்தியாகிவிடும்.
முன்பே ராஜ்புத் மக்கள் பிரச்சினை தீவிரமாக நடந்துவருகிறது. ஆளும் கட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணி குஜராத்தில் ஒரு மாற்றத்தை உண்டாக்க உள்ளது.
பாஜகவுக்கு உள்ள பட்டேல் மக்கள் ஆதரவும் குறைந்துவருகிறது. அப்படியான நிலையில் பாஜகவுக்கு வெற்றிவாய்ப்பை ஏற்படுத்தி தர யார் உதவி உள்ளார்கள் என்றால் சுயேச்சை வேட்பாளர்கள்தான்.
பல சுயேச்சை வேட்பாளர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு போட்டியிலிருந்து விலகிக் கொண்டு இருக்கிறார்கள். அடுத்ததாக களத்தில் காங்கிரஸ்தான் உள்ளது. பாஜக Vs காங்கிரஸ் என்ற போட்டியை எதிர்க்கொள்ள முடியாமல் தான் இப்படி குறுக்கு வழிகளில் இறங்கி உள்ளது பாஜக.
இதுவே பாஜகவின் பலவீனத்தை படம்பிடித்து காட்டுவதாகவே நாம் புரிந்து கொள்ள முடிகிறது" என்கிறார்
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications