Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவுக்கு ஆபத்தாக மாறிய 3 ஆம் கட்ட தேர்தல்! 30 தொகுதிகள் காலி? பழைய மெஜாரிட்டி வருமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2019 தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடும்போது இப்போது நடந்து முடிந்துள்ள 3 ஆம் கட்ட தேர்தலில் பாஜக 30 இடங்களை இழக்கக்கூடும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறியுள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலுக்கான 3 ஆம் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஏறக்குறைய 285 தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளன. நாட்டில் உள்ள பாதி தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவு பெற்றுள்ளது.

TN Lok Sabha Election 2024 Journalist Shyam says BJP will lose 30 seats

இந்த மூன்று கட்ட தேர்தல் முடிவுகளே பாஜகவுக்குச் சாதகமாக இல்லை என்று கருத்துகள் வெளியாகி வருகின்றன. கிடத்தவிட்ட பாஜக 2019 தேர்தல் முடிவின் போது தனது வெற்றியை உறுதி செய்துவிட்டது.

ஆனால், இந்த முறை நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. பல இடங்களில் பிரதமர் மோடியே தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளதாகத் தேர்தல் ஆணையத்திற்குப் புகார்கள் பறந்துள்ளன.

அவர் நடத்திய பஞ்சாப் மற்றும் குஜராத் ரோடு ஷோகளில் விதிமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் சர்ச்சை எழுந்துள்ளது.

பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் குஜராத்தில் இந்த முறை அந்தக் கட்சி சில இடங்களை இழக்கக்கூடும் என்கிறார்கள்.

கடந்த முறை காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட அமித்ஷாவுக்கு அமோக ஆதரவு அலை வீசியது. இந்த முறை அந்த அலையைக் காணோம் என்கிறார்கள். அவரும் தன்னை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்களை மறைமுகமாக மிரட்டி வருகிறார் என்ற புகார் ஒருபுறம் எழுந்துள்ளது.

2019இல் அமித்ஷா 894624 வாக்குகளைப் பெற்றிருந்தார். இது 69.7% வாக்குகள். அவரை எதிர்த்து நின்ற காங் வேட்பாளர் டாக்டர் சி. ஜே. சாவ்டா 337610 வாக்குகளைத்தான் பெற்றிருந்தார்.

கடந்த முறை காந்தி நகர் தொகுதியில் நோட்டாவே 14214 வாக்குகளைப் பெற்றிருந்தது. இது இந்த முறை இன்னும் கூடும் என்கிறார்கள்.

TN Lok Sabha Election 2024 Journalist Shyam says BJP will lose 30 seats

எனவே, எப்படிப் பார்த்தாலும் பாஜகவுக்கு இந்த மூன்றாம் கட்ட தேர்தல் பல அடிகளைக் கொடுத்துள்ளது என்று சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.
அவர் மிக விரிவாக இது குறித்து விளக்கிப் பேசியுள்ளார். நடந்து முடிந்துள்ள 3 ஆம் கட்ட தேர்தல் முடிவுகள் குறித்து ஷ்யாம் பேசுகையில், "சூரத்தில் பாஜக வெற்றி பெற்றுவிட்டது என்று சொல்ல முடியாது. அங்கே ஒரு பஞ்சாயத்து போய்க் கொண்டுதான் இருக்கிறது. 2013இல் நோட்டா கொண்டுவரப்பட்டது.

அதன்பிறகு தேர்தல் அதிகாரிக்கு ஒருவர் வெற்றிபெற்றுவிட்டார் என்று ஒருதலைபட்சமாக அறிவுக்கும் அதிகாரம் இல்லை. எந்த வேட்பாளரும் களத்தில் இல்லை என்றாலும் நோட்டா முறை என்பது உள்ளது. அதற்கு வாக்களிக்கும் உரிமை வாக்காளராகிய நமக்கு உள்ளது. அதை யாரும் பறித்துவிட முடியாது.

அப்படியே அவர் அறிவிக்க நினைத்தால், ஜூன் 4 அன்றுதான் அறிவிக்க முடியும். அதற்கு முன்னதாக வெற்றிபெற்ற பத்திரத்தை எப்படி அந்த சூரத் தேர்தல் அதிகாரி வழங்கினார் என்றே எனக்குப் புரியவில்லை.

அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. ஆகவே அதை வெற்றிபெற்றுவிட்டதாக நாம் ஏற்க முடியாது. எந்த நேரமும் அந்த வெற்றி செல்லாது என அறிவிக்கப்படலாம்.

கடந்த 2019இல் நடைபெற்ற மூன்றாவது ரவுண்ட் தேர்தல் போது பாஜகவுக்கு அதிகப்படியான இடங்கள் கிடைக்கக் கூடும் என்று உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த முறை 3 ஆம் கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், பாஜகவுக்குப் பழைய செல்வாக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதே கள நிலவரமாக உள்ளது.

குறிப்பாகக் கர்நாடகாவில் கடந்த முறை பாஜக பெற்ற இடங்களில் பாதியைப் பெறுமா என்பதே சந்தேகம்தான். கர்நாடகாவில் எழுந்துள்ள பாலியல் புகார் பாஜகவுக்கு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தி உள்ளது. நிச்சயம் 15 தொகுதிகளை பாஜக இழக்கவே செய்யும்.

அதைப்போல மல்யுத்த வீரர்களின் பாலியல் புகார். இந்தத் தேர்தலில் இந்தப் பிரச்சினை ஹரியானா பாஜகவைக் கட்டாயம் பாதிக்கும். இதே மாதிரி மணிப்பூரில் பல பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம். அதுவும் தேர்தலைப் பாதிக்கும்.
அடுத்து குஜராத். அங்கே தேர்தல் அதிகாரிகளின் போக்கு அப்பட்டமான விதிமீறல். அரவிந்த் கெஜ்ரிவால் கைது குஜராத் அரசியலில் பெரிய தாக்கத்தை உண்டாக்க உள்ளது.

TN Lok Sabha Election 2024 Journalist Shyam says BJP will lose 30 seats

அமித்ஷாவுக்கு எதிராக வேட்பாளர்கள் போட்டிப் போட முடியாத நிலை உள்ளது. ஒரு வேட்பாளர் வெளிப்படையாகப் பேட்டியே கொடுத்துள்ளார். அமித்ஷாவை எதிர்த்து களம் காணும் காங் வேட்பாளர் சோனல் ராமன்பாய் படேல், 'எங்களுக்கு வீடு கூட வாடகைக்குத் தர மறுக்கிறார்கள்' என்று புகார் தெரிவித்துள்ளார்.

அமித்ஷாவுக்கு அந்தத் தொகுதியில் மக்கள் செல்வாக்கு இருந்தால், அவர் ஏன் இப்படி வேட்பாளர்களை அச்சுறுத்தப் போகிறார்? ஆக, பாஜகவுக்குத் தோல்வி பயம் உள்ளதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

இந்த 3 ஆம் கட்டத் தேர்தல் முடிவுகளைக் கணித்துப் பார்த்தால் 2019இல் பாஜக பெற்ற இடங்களில் 20 முதல் 30 தொகுதிகளை இந்த முறை இழந்துவிடுவார்கள் என்பதே நிஜமாக உள்ளது.

அப்படிப் பார்த்தால் கடந்த முறை பாஜக 303 தொகுதிகளில் வென்றிருந்தது. அதில் 30 தொகுதிகள் குறைந்தாலே பெரும்பான்மையை அந்தக் கட்சி இழக்க நேரிடும்" என்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+