Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய பணக்காரர்களில் ஒரு முஸ்லிம்கூட இல்லையே ஏன்? மோடிக்கு காங். கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முஸ்லிம்கள் சொத்து சேர்க்க காங்கிரஸ் கட்சி உதவி செய்திருந்தால், நாட்டில் அதிக பணக்காரர்களாக முஸ்லிம்கள்தானே இருக்க வேண்டும்? இந்தியாவில் உள்ள 4 பணக்காரர்களில் ஒருவர்கூட முஸ்லிம் இல்லையே ஏன்? என்று திருச்சி வேலுச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு நாடு தயாராகி வருகிறது.

TN Lok Sabha Election 2024 Trichy Velusamy replies to Modi s anti-Muslim speech

ஆகவே, வடமாநிலங்களில் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்நேரத்தில் பாஜக தனது பழைய பிரச்சார யுக்தியை மாற்றியுள்ளது. மத ரீதியான தாக்குதல்களில் பாஜக இறங்கி உள்ளது.

நேரடியாக இஸ்லாமியர்களை குறிவைத்து மோடி பேச தொடங்கி உள்ளார். பழைய மோடி மீண்டும் வெளிப்படுகிறார் என்று எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்

ராஜஸ்தானில் நடைபெற்ற பரப்புரையில் பேசிய மோடி, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

அடுத்ததாக, இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது என்றார் மோடி.

மறுபடியும் பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.

TN Lok Sabha Election 2024 Trichy Velusamy replies to Modi s anti-Muslim speech

மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது என்று மத ரீதியான தாக்குதலை நடத்தி இருந்தார் மோடி.

இந்தப் பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. காங். தேர்தல் ஆணையத்திடம் மோடி பேச்சு குறித்து புகார் அளித்துள்ளது.

இந்நிலையில் மோடியின் பேச்சு குறித்து சில கேள்விகளை முன்வைத்துள்ளார் காங். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருச்சி வேலுச்சாமி. அவர் இது தொடர்பாக ஒரு யூடியூப் தளத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் வேலுச்சாமி, "இந்த நாட்டை அதிக காலங்கள் ஆண்டது காங்கிரஸ் கட்சிதான். மோடி ஒரு 10 ஆண்டு காலம் ஆண்டுள்ளார். வாஜ்பாய் 7 ஆண்டு காலம். மொத்தம் 17 வருட பாஜக ஆட்சி. அதைவிட்டால் அதிக வருடங்கள் இந்த நாட்டை காங்கிரஸ்தான் ஆண்டு உள்ளது.

TN Lok Sabha Election 2024 Trichy Velusamy replies to Modi s anti-Muslim speech

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் ஆட்சி செய்துள்ளது. மோடி சொல்வதைப் போன்று முஸ்லிம்கள் சொத்து சேர்ப்பதற்கு காங்கிரஸ் உதவி செய்திருந்தால், இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்கள் எல்லாம் பணக்காரர்களாகி இருப்பார்கள்.

இந்த நாட்டில் மிகப்பெரிய கோடீஸ்வரர்களாக உள்ள சில பெயர்களை எடுத்துக் கொள்வோம். அதானி, அம்பானி எல்லாம் இன்றைக்கு வந்தவர்கள். அதற்கு முன்னால் இருந்தவர்கள் டாடா, பிர்லாதான். இந்த 4 கோடீஸ்வரர்களைத் தாண்டி இந்தியாவில் பெரிய பணக்காரர்கள் இல்லை.

அப்படிப் பார்த்தால் இந்த 4 பேரில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லையே? இந்த நாட்டு மக்களைப் பற்றி மோடி என்ன நினைத்திருக்கிறார். என்ன சொன்னாலும் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நினைத்துப் பேசுகிறாரா?

TN Lok Sabha Election 2024 Trichy Velusamy replies to Modi s anti-Muslim speech

அதிக ஓட்டுகளை வாங்க வேண்டும் என்று நினைத்தால் காங்கிரஸ் கட்சி இந்துக்களைத்தானே தாஜா செய்யும். குறைவான வாக்குகளை வைத்துள்ள முஸ்லிம் மக்களையா தாஜா செய்யும்? மோடியின் பேச்சில் லாஜிக்கே இல்லையே?

அவர் முதல் கட்ட தேர்தல் முடிந்த பிறகு நிறையவே உளற ஆரம்பித்திருக்கிறார். அவருக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது. அது அவரது பேச்சை வைத்தே புரிந்துகொள்ள முடிகிறது" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+