Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் எம்பிபிஎஸ் கவுன்சிலிங்.. 149 மார்க் எடுத்த 49 வயது அம்மாவுக்கு சீட் கிடைத்து எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: (TN MBBS counselling 2025) இளநிலை மருத்துவப்படிப்பு படிக்க வயது வரம்பு இல்லை என்கிற நிலை இந்தியாவில் இருக்கிறது. கடந்த 2022ம் ஆண்டு முதல் வயதுவரம்பு இல்லாமல் யார் வேண்டுமானாலும் நீட் தேர்வு எழுதலாம் என்கிற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதன் காரணமாக பல ஆண்டுக்கு பின் வயதானவர்கள் இப்போது நீட் தேர்வுகளை எழுதுகிறார்கள். அந்த வகையில் 49 வயது பெண், மகளுடன் சேர்ந்து நீட் தேர்வு எழுதி வென்றுள்ளார். மகளுடன் சேர்ந்து அவரும் மருத்துவம் படிக்க போகிறார். இதற்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நேற்று தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 37 அரசு கல்லூரிகளில் உள்ள 4,336 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், சுயநிதி கல்லூரிகளில் உள்ள 2,264 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள 1,583 பி.டி.எஸ். இடங்களுக்கும் இந்த கலந்தாய்வு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

TN MBBS counselling 2025 A mother from Tenkasi who is studying medicine with her daughter at 49


எம்பிபிஎஸ் கலந்தாய்வு

முதல் நாளான நேற்று சிறப்பு பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. சிறப்பு பிரிவில் வரும் விளையாட்டுப்பிரிவில் 7 இடங்களும், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் பிரிவில் 11 இடங்களும் நிரம்பின. மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 212 இடங்கள் காலியாக இருந்த நிலையில், அதற்கு 56 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தார்கள். அவர்கள் அனைவரையும் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்களும் இடங்களை தேர்வு செய்தார்கள்.

கலந்தாய்வுக்கு தாய் மகள் வந்தனர்

அந்த வகையில் இதில் சிறப்பு பிரிவு கலந்தாய்வில் பங்கேற்க தாயும், மகளும் நேற்று ஓமந்தூரார் மருத்துவனைக்கு வந்திருந்தனர். முதலில் மகளுக்காக தாய் உடன் வந்திருக்கிறார் என நினைத்திருந்த நிலை அப்படியே மாறி, கலந்தாய்வில் மகள் உதவியுடன் தாய் மருத்துவப்படிப்பை தேர்வு செய்திருந்தார். 50 வயதை தொடப்போகும் அந்த பெண் இளநிலை மருத்துவம் படிக்க போகிறார்.

மாற்றுத்திறனாளி பிரிவில் இடம்

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 49 வயதாகும் அமுதவல்லி என்ற பெண், மருத்துவம் படிக்க இருக்கிறார். 'நீட்' தேர்வுக்காக மகள் படிக்க தயாராகி கொண்டிருந்தபோது அந்த புத்தகத்தை தானும் படித்து நீட் தேர்வை மகளுடன் சேர்ந்து எழுதியிருக்கிறார். நீட் தேர்வில் தாய் அமுதவல்லி 147 மதிப்பெண் எடுத்திருந்தார். எனினும் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் அவர் விண்ணப்பித்த காரணத்தால் அவருக்கு இடம் கிடைத்திருக்கிறது. விருதுநகர் மருத்துவக்கல்லூரியை அவர் தேர்வு செய்துள்ளார்.

அமுதவல்லி பேட்டி

இதுகுறித்து அமுதவல்லி கூறும் போது, "நான் 'பிசியோதெரபிஸ்ட்டாக' பணியாற்றி வருகிறேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு மருத்துவம் படிக்க ஆசை வந்தது. ஆனால் அப்போது எனக்கு அதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இப்போது என்னுடைய மகள் மூலம் அந்த கனவு நிறைவேறி உள்ளது. ஆனால் ஒரே மருத்துவக்கல்லூரியில் இருவரும் படிக்கக்கூடாது என உறுதியாக இருக்கிறோம்" என்றார்.

மகளும் டாக்டராக போகிறார்

மருத்துவம் படிக்க இருக்கும் அமுதவல்லியின் மகள் சம்யுக்தா கிருபாளினியும் நீட் தேர்வில் 460 மதிப்பெண் எடுத்திருக்கிறார். பொது கலந்தாய்வில் பங்கேற்றிருக்கிறார். ஓரிரு நாளில் அவருக்கும் கலந்தாய்வின் போது இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் தாயும், மகளும் ஒரே ஆண்டில் இளநிலை மருத்துவம் படிக்க போகிறார்கள்.

வயது கட்டுப்பாடு தேவை

இதை பார்த்த நெட்டிசன்கள் இளம் மாணவ மாணவிகளின் சீட்டை பறிக்க வேண்டமாம் என்று விமர்சித்து வருகிறார்கள். இந்த வயதில் எம்பிபிஎஸ் படித்தால் பல இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் விமர்சிக்கிறார்கள். மேலும் நீட் தேர்வு எழுத வயது வரம்பை அரசு நிர்ணயிக்கவேண்டும் என்றும் இல்லாவிட்டால் 60 வயதாகும் ஒருவர், தமிழில் படித்ததாக கூறி இடஒதுக்கீடு பெற்று எம்பிபிஎஸ் படிக்கவும் வாய்ப்பு உள்ளது என்பதால், வயது வரம்பு கண்டிப்பாக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+