"அகம் புறம்.." ஜெர்மனியில் நடைபெறும் தமிழ் கண்காட்சி! தொடங்கி வைக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை: தமிழையும் தமிழ் மரபையும் ஐரோப்பா வாழ் மக்களுக்குக் காட்சிப்படுத்தும் வகையில் கண்காட்சி நடைபெற உள்ளது. இதனை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழர்களின் வரலாறு மற்றும் தமிழ்ப்பண்பாடு பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இதை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்ல பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
அப்படித்தான் இப்போது தமிழ் மரபையும் ஐரோப்பா வாழ் மக்களுக்குக் காட்சிப்படுத்தும் வகையில் அகம் புறம் என்ற கருப்பொருளில் கண்காட்சி நடைபெற உள்ளது.

கண்காட்சி
கடல் கடந்து தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் தமிழ், தமிழ் வரலாறு, தமிழ்ப்பண்பாடு ஆகியவற்றைப் பேணுவதற்காக பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது. அத்தகைய முயற்சிகளுள் ஒன்றாக ஸ்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகத்தில் சங்ககால வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையிலும் பல பரிமாணங்களில் தமிழையும் தமிழ் மரபையும் காட்சிப்படுத்தும் வகையில் கண்காட்சி நடைபெறுகிறது.

அகம் புறம்
ஐரோப்பா வாழ் மக்களுக்குச் சங்க கால வாழ்வியலைக் காட்சிப்படுத்தும் வகையில் அகம் புறம் என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த கண்காட்சி மொத்தம் 6 மாதங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சியின் தொடக்க விழா நாளை (அக். 7) வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

அமைச்சர் தங்கம் தென்னரசு
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ளும் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பண்பாடு துறைச் செயலர் சந்திரமோகன் ஆகியோர் ஜெர்மனி வாழ் தமிழ் மக்களைச் சந்தித்து உரையாடவும் உள்ளனர். மேலும், லிண்டன் அருங்காட்சியகத்துடனான தமிழகத் தொடர்புகளை அதிகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

ஆறு மாதங்கள்
அதற்கு மறுநாள் (அக். 8) சனிக்கிழமை காலை 10 மணிக்குப் பொதுமக்களுக்குக் கண்காட்சி திறக்கப்பட உள்ளது. 6 மாதங்கள் நடைபெறும் இது அகம் புறம் என்ற கருப்பொருளில் சங்ககால வாழ்வியலைக் காட்சிப்படுத்தும் வகையிலான விஷயங்களை உள்ளடக்கி இருக்கும் என்று கூறப்படுகிறது. அமைச்சர் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர், இந்த லிங்கில் சென்று தங்கள் விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications