கர்நாடகா ஹிஜாப் அணிய தடை விதித்ததற்கு கண்டனம்- தமிழகத்தில் பல இடங்களில் போராட்டம்
சென்னை: கர்நாடகாவில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சென்னை, வேலூர் உள்ளிட்ட பல இடங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை செல்லும் எனவும் கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சென்னை வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வண்ணாரப்பேட்டை பள்ளிவாசல்கள் மற்றும் அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் சார்பாக இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட குழந்தைகள் ஆண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
இதனால் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் காவல் துறை சார்பாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம்
வேலூர்மாவட்டம்,வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் அனைத்து இஸ்லாமியர்கள் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா ஷம்சுல் ஹுதாபாகவி தலைமையில் கர்நாடகாவில் ஹிஜாப் அணிய தடை விதித்தை திரும்ப பெற கோரியும் இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரியும் மத உரிமையில் தலையிடுவதை கைவிட வலியுறுத்தியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் திராவிட முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில தலைவர் இக்பால் உள்ளிட்டோர் பங்கேற்றனர் . அடுத்த கட்டமாக மத உரிமையை நிலைநாட்டும் வகையில் உச்சநீதிமன்றத்தை நாடி சட்ட போராட்டம் நடத்துவோம் எனவும் தெரிவித்தனர். இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று போராட்டம் நடைபெற்றது.
-
தமிழகத்தில் பிறக்கும் குழந்தையின் மீது கடன் சுமை! 4 முக்கிய காரணங்களை சொன்ன வெள்ளை அறிக்கை -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications