இசைக்கு எவர் ஆறுதல் சொல்வது?.. மாணிக்க விநாயகம் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்!
சென்னை: பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 78. ஏறக்குறைய 800 பாடல்கள் வரை பாடியுள்ள மாணிக்க விநாயகம் தமிழில் ஏராளாமான பாடல்களை பாடியுள்ளார்.
Recommended Video
தமிழில் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மாணிக்க விநாயகம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

''பிரபல திரைப்படப் பாடகர் திரு. வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்! தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அன்பைப் பொழிந்து, பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதேபோல் கவிப்பேரரசு வைரமுத்துவும் மாணிக்க விநாயகம் மறைவுக்கு கவிதை வடிவில் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
''இசை மரபிலே வந்த
மாணிக்க விநாயகம்
மறைந்துற்றார்
"விடைகொடு எங்கள் நாடே"
என்று பாடியவர் விடைபெற்றார்
நல்ல கலைஞன் - நல்ல மனிதன்
என்று இரண்டும் கூடிய
அபூர்வம் அவர்
குடும்பத்திற்கு
நாம் ஆறுதல் சொல்லலாம்
எவர் சொல்வது இசைக்கு...?












Click it and Unblock the Notifications