வாக்குச்சாவடிக்குள் புகுந்து ரகளை! இவிஎம் இயந்திரங்களை உடைத்த திமுகவினர் மீது 3 பிரிவுகளில் வழக்கு
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் புகுந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை திமுக நபர்கள் உடைத்த சம்பவத்தில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நேற்று 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
மாநிலத்தில் நேற்று ஆங்காங்கே சிறு சிறு பூசல்கள் ஏற்பட்டாலும் கூட, பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையிலேயே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது. மோதல் ஏற்பட்ட இடங்களில் விரைந்து சென்ற போலீசார் நடவடிக்கை எடுத்ததால், எங்கும் பெரியளவில் பிரச்சினை ஏற்படவில்லை. இதனால் மாலை 6 மணி வரை பொதுமக்கள் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

பயங்கர ஆயுதங்கள்
இதனிடையே நேற்று சென்னையில் வாக்குச்சாவடி மையத்தில் புகுந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை உடைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது சென்னை ஒடைக்குப்பம் 179 வார்டு பகுதியில் அதிமுக சார்பாக ஜமுனா கணேசன் என்பவரும் தி.மு.க சார்பில் கயல்விழி என்பவரும் போட்டியிட்டனர். நேற்று மாலை வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டு இருந்த போதே சிலர் பயங்கர ஆயுதங்களுடன் வாக்குப்பதிவு மையத்திற்கு நுழைந்துள்ளனர்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேசம்
கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த அவர்கள், வாக்குப்பதிவு மையத்தில் புகுந்து வாக்குப்பதிவு இயந்திரத்தைச் சேதப்படுத்தியுள்ளனர். மேலும், அங்கிருந்த வாக்காளர்களை உடனடியாக வெளியேறும்படி கூறி மிரட்டி தகராற்றில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் கிடைத்து போலீசார் அங்குச் செல்வதற்குள், தகராறு செய்தவர்கள் தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் வாக்குச்சாவடியில் புகுந்து வாக்குப்பதிவு இயந்திரத்தைச் சேதப்படுத்தியது திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த கதிர் என்ற திமுக பிரமுகர் என்பதும் அவர் தான் அடியாட்களுடன் வந்து தகராற்றில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து கதிர் (எ) கதிரவன் மற்றும் அவருடன் வந்த நபர்கள் மீது அரசு சொத்தை சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்து அமைதியைச் சீர்குலைத்தல் உள்ளிட்ட 3 மூன்று பிரிவுகளின் கீழ் திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள கதிர் (எ) கதிரவன் மற்றும் அவருடன் வந்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications