யாருப்பா அந்த 24 பேர்.. இவ்வளவு சொல்லியும் விடாமல் "அதை" பார்த்த சில்மிஷக்காரர்கள்.. தீவிர விசாரணை!
Recommended Video
சென்னை: யார் அந்த 24 பேர் என்று தெரியவில்லை.. குழந்தைகளின் ஆபாச படத்தை இந்த 30 பேரும் பார்த்திருக்கிறார்கள்.. இவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.. அது மட்டுமில்லை.. இவர்களில் பெரும்பாலானோர் சென்னையை சேர்ந்தவர்களாம்!
''குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள், வீடியோக்களை பார்ப்பது சட்டப்படி குற்றம். ஆபாச படம், வீடியோக்களை, மொபைல் போன், லேப்டாப்களில் வைத்திருப்பதும், அது சம்பந்தப்பட்ட லிங்க்குகளை பதிவிறக்கம் செய்வதும் சட்டப்படி குற்றம். இப்படி செய்பவர்களுக்கு 3 முதல் 7 வருஷம் வரை இவர்களுக்கு ஜெயில் தண்டனை கிடைக்கும்" என்று காவல்துறை ஏற்கனவே எச்சரித்திருந்தது.
இவ்வளவு கடுமையாக எச்சரித்தும்கூட, திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் சிக்கினார்.. இவரை அடுத்து நேற்று முன்தினம் சென்னையில் மோகன் என்ற 72 வயசு தாத்தா சிக்கினார்.. இப்போது, இருவரும் போலீசாரின் கஸ்டடியில் உள்ளனர்.

ஆபாச படம்
இதனிடையே, சென்னையில் இன்டர்நெட் மையங்களில் போலீசார், சோதனை மேற்கொண்டனர். அப்போது சிறார் ஆபாச படங்கள் குறித்த எச்சரிக்கையும் மிக கடுமையாக விடுத்தனர். சில தினங்களுக்கு முன்பு பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் கூடுதல் டிஜிபி. ரவி பேசினார்.. அப்போது, சென்னை போலீசிடம் ஆபாச படங்களை பார்த்தவர்களின் 30 பேர் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

30 பேர்
அந்த வகையில், அந்த 30 பேரிடம் விசாரிக்க போலீஸ் முடிவெடுத்துள்ளது.. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவில் துணை கமிஷனராக இருக்கும் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் 30 பேரையும் பிடிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கினர். அந்த 30 பேரின் ஐ.பி. அட்ரஸ் வைத்து.. அவர்கள் யார் என்று விசாரணை நடத்தப்பட்டது.

24 பேர்
இதில், 30 பேரில் 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 24 பேரின் செல்போன் நம்பரை வைத்து துப்பும் துலக்கப்பட்டது.. அதில், பெரும்பாலானோர் சென்னைக்கு வெளியே இருப்பது தெரிய வந்துள்ளது.. குறிப்பாக ஒருசிலர் மேற்கு வங்காளத்தில் இருக்கிறார்களாம்.. செல்போன் சிக்னல் அங்குதான் காட்டிஉள்ளது..

நடவடிக்கை
அதனால் அந்த 24 பேர் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.. விரைவில் அவர்கள் கைது செய்யவும் உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆபாச வீடியோ விவகாரத்தில் சென்னை போலீஸ் செம ஸ்ட்டிரிக்ட்டாக இறங்கி உள்ளனர்.

கலக்கம்
விறு விறு விசாரணை.. அதிரடி சோதனை.. கைது என அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்து வருவதால், இளைஞர்கள் மத்தியில் பெரும் கலக்கம் ஏற்பட்டு உள்ளது. இதையெல்லாம் பார்த்து ஆபாச வீடியோ பார்ப்பவர்கள் கதி கலங்கி போயுள்ளனராம்.. அதனால் ஏற்கனவே தங்கள் செல்போனில் பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த, குழந்தைகள் ஆபாச வீடியோக்களை வேகவேகமாக டெலிட் செய்து வருகிறார்களாம்!
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications