சொத்து வரி கட்டப் போறீங்களா? நில்லுங்க! வீடு வைத்திருப்பவர்களுக்கு தமிழக அரசின் அதிரடி சர்ப்ரைஸ்
சென்னை: தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. அதற்கான பரபரப்புகள் தமிழகத்தில தென்பட துவங்கிவிட்டன.. இந்நிலையில, தேர்தலை மனதில் கொண்டு, சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரபரத்து வருகின்றன.. இதன் உண்மைத்தன்மை தெரியாவிட்டாலும் சொத்து வரி உயர்வு குறித்த எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது...!
சொந்தமாக வீடு வைத்திருப்பவர்கள், நிலம் வைத்திருப்பவர்கள் போன்றோரிடம் மாநகராட்சி சார்பில் சொத்து வரி வசூலிக்கப்படுவது வழக்கமாகும்.. இதுதான், மாநகராட்சிகளுக்கு முக்கிய வருவாய் இனமாக விளங்கி வருகிறது.

இந்த வருவாயை கொண்டு, மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார பணிகள், திடக்கழிவுகளை அகற்றுதல், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
சொத்து வரி அவசியம்
அதனால்தான், உரிய காலக்கட்டத்தில் வரியை செலுத்துவோர்களை ஊக்குவிப்பதற்காக சலுகைகள் வழங்கப்படுகின்றன.. குறிப்பிட்ட தேதிக்குள் முழுமையாக செலுத்துவோருக்கு முதன் முறையாக 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.. காலக்கெடு முடிந்தும் வரிகட்டாமல் இருந்தால் அபராதமும் விதிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் வரியை செலுத்த, அந்தந்த மாநகராட்சிகள், பல்வேறு விழிப்புணர்களை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை மாநகராட்சி
மாநகராட்சி நிர்வாகத்தின் முதுகெலும்பாக திகழும் சொத்து வரி, ஒரு நகரத்தின் வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய காரணியாகவும் விளங்கி கொண்டிருக்கிறது.. எனவே, வரியை சுமையாக கருதாமல், நம்முடைய இருப்பிடத்தின் தரம் உயர நாம் செய்யும் முதலீடாகக் கருதி அனைவரும் உரிய நேரத்தில் செலுத்த வேண்டும். நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி எளிதாக வரி செலுத்தும் முறை இன்று நடைமுறையில் உள்ளதால், அதனை முறையாகப் பின்பற்றுவது நகரத்தின் முன்னேற்றத்திற்கு வலுசேர்க்கும்..
இப்படிப்பட்ட சூழலில், வரி உயர்த்தப்படலாம் என்ற பேச்சு அடிபட துவங்கி உள்ளது... காரணம், கடந்த 2022ம் ஆண்டு தமிழக அரசு சொத்துவரியை இரட்டிப்பாக உயர்த்திய நிலையில், அதனை தொடர்ந்து 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயர்வை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை 2024ல் அமல்படுத்தியது.
தமிழக அரசின் சொத்து வரி உயர்வு?
இந்த விதியின்படி, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் சொத்துவரி தானாகவே உயர வேண்டும். இருந்தாலும், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை மனதிற்கொண்டு, பொதுமக்களின் சுமையை குறைக்கும் நோக்கில் 2025ம் ஆண்டிற்கான 6 சதவீத சொத்துவரி உயர்வை தமிழக அரசு தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்த வரி உயர்வு நிறுத்தம் தற்காலிகமானது என்றும், தேர்தல் நடைமுறைகள் முடிந்த பிறகு மீண்டும் அமல்படுத்தப்படும் என்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
6 சதவீத வரி உயர்வு
அரசின் இந்த முடிவால் பொதுமக்களுக்கு உடனடி நிம்மதி கிடைத்தாலும், உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
உதாரணமாக, சென்னை மாநகராட்சி மட்டும் ஆண்டுக்குச் சுமார் 2,000 கோடி ரூபாய் வரை சொத்துவரி மூலம் வருவாய் ஈட்டுகிறது.. தற்போது இந்த 6 சதவீத வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதன் காரணமாக, சென்னை மாநகராட்சிக்கு மட்டும் சுமார் 60 லட்சம் ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
புதிய வரி உயர்வு எப்போது?
நகரத்தின் வளர்ச்சி பணிகள், தூய்மை பராமரிப்பு மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்த நிதி மிகவும் அவசியமானது என்றாலும், அரசியல் சூழல் மற்றும் மக்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிந்து புதிய வரி உயர்வு அமலுக்கு வரும்போது, அது உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை சீர்செய்ய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை தற்போதைய நிலுவை தொகைகளை விரைந்து வசூலிப்பதன் மூலம் இந்த நிதி இழப்பை ஈடுகட்ட அதிகாரிகள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன... உண்மை நிலவரம் என்னவென்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...!!
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications