தமிழகம், பஞ்சாப், ஹரியானாவில் மத்திய பாஜக அரசின் புதிய விவசாய சட்ட நகல்கள் எரிப்பு
சென்னை/சண்டிகர் : தமிழகம், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் மத்திய பாரதிய ஜனதா அரசின் 3 புதிய விவசாய சட்ட நகல்களை விவசாயிகள் எரித்து போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லி எல்லைகளில் 6 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் இடைவிடாமல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன.

உச்சநீதிமன்றமும் தலையிட்டு விவசாய சட்டங்கள் செயல்படுத்தப்படுவதை நிறுத்தி வைத்துள்ளது. டெல்லியில் போராடும் விவசாயிகளைப் பொறுத்தவரை 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்பதுதான் நிலைப்பாடு.
இதனை வலியுறுத்தி கடந்த மாதம் நாடு தழுவிய கறுப்பு தினம் அனுசரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதேபோல் நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய சட்டங் நகல்கள் எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
பஞ்சாப், ஹரியானாவில் பாஜக தலைவர்களின் வீடுகள் முற்றுகையிடப்பட்டு விவசாய சட்ட நகல்கள் எரிக்கப்பட்டன. தமிழகத்திலும் பல இடங்களில் இந்த சட்ட நகல்கள் எரிக்கப்பட்டன. தமிழகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சட்ட நகல்கள் எரிப்பு போராட்டம் பல இடங்களில் நடைபெற்றன.












Click it and Unblock the Notifications