டிரான்ஸ்பார்மர்கள் அருகில் போகதீர்கள்.. கால்நடைகளை மின் கம்பங்களில் கட்டக்கூடாது.. மின்துறை அறிவுரை!
சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால், மின்சார வாரியத்தின் தரப்பில் பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளது. மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், கால்நடைகளை மின் கம்பத்தில் கட்டி வைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தென்காசி மற்றும் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காலையில் தொடங்கிய மழை தொடர்ந்து நிற்காமல் பெய்து கொண்டே இருப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நகரின் முக்கியப் பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதேபோல் மழைக் காரணமாக சொந்த ஊரில் இருந்து தீபாவளி விடுமுறை முடிந்து ஊர் திரும்புவோர், பயணிக்கலாமா, வேண்டாமா என்று குழப்பத்தில் உள்ளனர். அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்து வருகின்றன. மேட்டூர் அணை நடப்பாண்டில் மட்டும் 7வது முறையாக நிரம்பி இருக்கிறது.
இந்த நிலையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு மின்சார வாரியம் சார்பாக பல்வேறு அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.
அதேபோல் சாலைகளிலும், தெருக்களிலும் மின் கபங்காள் மற்றும் மின் சாதகங்களுக்கு அருகே தேங்கி கிடக்கும் தண்ணீரில் நடப்பதோ, ஓடுவதோ, விளையாடுவதோ மற்றும் வாகனத்தில் செல்வதோ தவிர்க்கப்பட வேண்டும். அதேபோல் தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல் ஈரமான கைகளாக் மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம் என்றும், வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், மின்சார கம்பத்திலோ அல்லது அதற்காக போடப்பட்டுள்ள ஸ்டே வயரின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக மின் கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் கம்பங்களிலோ கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மின்சார வாரியத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி, மழைக் காலத்தில் மின்சாரத்தால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications