தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 185; சென்னையில் 94 பேருக்கு தொற்று!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 185 ஆக பதிவாகி உள்ளது. தமிழகத்தில் சென்னையில்தான் அதிகபட்சமாக 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் யாரும் புதியதாக உயிரிழக்கவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிவேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முக கவசம் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்படுகின்றன.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 32,498 என்றும் கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 0.08 சதவிகிதமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.71 சதவீதம் எனவும், கடந்த 24 மணி நேரத்தில் 3,591 பேர் குணமடைந்துள்ளனர்; இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,26,40,301 என அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் 7,240 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 2.13 சதவீதம் ஆகும். வாராந்திர பாதிப்பு விகிதம் 1.31 சதவீதம் ஆகும். இதுவரை மொத்தம் 85.38 கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 3,40,615 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன எனவும் மத்திய அரசு கூறியிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 150ஐ தாண்டியதாக தொடர்ந்து இருக்கிறது. தமிழகத்தில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 195 ஆக இருந்தது. இன்று இது 185 ஆக உள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்து இன்று 129 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் அதாவது ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 1077; தமிழகத்தில் சென்னை- 94; செங்கல்பட்டு 24; காஞ்சிபுரம் 19; கோவை மாவட்டத்தில் 9 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications