சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 13,776 பேருக்கு கொரோனா பாதிப்பு- 78 பேர் மரணம்; 8078 பேர் டிஸ்சார்ஜ்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 13,776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் கொரோனாவுக்கு 78 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இன்று மட்டும் மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சைக்குப் பின்னர் 8078 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. இன்று தமிழகத்தில் 1,22,900 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

TN Reports 13,776 new Coronavirus cases

இதில் 13,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,51,487 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,14,02,442 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் இன்று ஒருநாள் மட்டும் கொரோனாவுக்கு 78 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 13,395 ஆகவும் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை - ஆக்டிவ் கேஸ்கள் 95,408. தமிழகத்தில் இன்று மட்டும் 8078 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் மொத்த எண்ணிக்கை 9,43,044.

மாவட்டங்களைப் பொறுத்தவரையில் சென்னையில்தான் மிக மோசமான பாதிப்பு உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3842 ஆகவும் உயிரிழப்புகள் எண்ணிக்கை 37 ஆகவும் உள்ளது.

"அய்யோ".. தொப்பென்று.. நடுரோட்டில் விழுந்த பிணம்.. அலறி அடித்து ஓடிய மக்கள்.. ஷாக் வீடியோ!

செங்கல்பட்டு 985; கோவை- 889; திருவள்ளூர் 807; நெல்லை 517 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

English summary
Tamil Nadu reported 13,776 new Coronavirus cases, 8078 recoveries and 78 deaths in the last 24 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X