தமிழகத்தில் ஒரே நாளில் 5,990 பேருக்கு கொரோனா; 98 பேர் உயிரிழப்பு- டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 5,891
சென்னை: தமிழகத்தில் புதன்கிழமை ஒரேநாளில் 5,990 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் 98 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் 5,891 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் தொடர்ந்து தமிழ்நாடு 3-வது இடத்தில் இருக்கிறது. மகாராஷ்டிராவும் ஆந்திராவும் முதல் 2 இடங்களில் உள்ளன.
தமிழகத்தில் புதன்கிழமை மட்டும் ஒரேநாளில் 5,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

7,516 பேர் உயிரிழப்பு
இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 4,39,959 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 98 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 7,516 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய ஆக்டிவ் கேஸ்கள்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 5891 பேர் இன்று மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆனவர்கள் மொத்த எண்ணிக்கை 3,80,063. தமிழகத்தில் மொத்தம் 52,380 பேர்தான் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை, கடலூரில் அதிக பாதிப்பு
மாவட்டங்களில் சென்னையில் 1025 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கோவையில் மொத்தம் 579 பேருக்கும் கடலூரில் முதல் முறையாக 405 பேருக்கும் செங்கல்பட்டில் 390 பேருக்கும் சேலத்தில் 403 பேருக்கும் ஒரேநாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரேநாளில் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்களில் 5வது இடம்
மொத்த கொரோனா பாதிப்பில் தமிழகம் 3-வது இடத்தில் இருக்கிறது. இந்திய அளவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் தமிழகம் 5-வது இடத்தில்தான் இருக்கிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, தமிழகத்தைவிட அதிகம். மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியது. ஆந்திராவில் இது 1 லட்சத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 52,380 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications