ஓஎம்ஆர்.. ஈசிஆரைவிடுங்க.. வருகிறது சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு.. இனி சல்லு சல்லுனு போகலாம்
சென்னை: தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடுக்கான டெண்டர் விட்டுள்ளது. இங்கே புதிய சாலை அமைக்க, சாலை மேம்பாட்டிற்கு டெண்டர் விட்டுள்ளது.
சென்னையில் பல்வேறு சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மாநில நெடுஞ்சாலைத்துறை 15.7 கோடி ரூபாயை செலவு செய்ய உள்ளது. இதன் மூலம் கிண்டியில் இருந்து தாம்பரம் வரை போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் ஒரு கட்டமாக ஓஎம்ஆர் சாலைக்கு மாற்றாக புதிதாக Chennai Peripheral Ring Road, அதாவது சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு கொண்டு வர உள்ளனர். சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு, ₹12,301 கோடி மதிப்பீட்டில் 133.38 கிலோமீட்டர் நீளத்தில் அமைய உள்ளது. இந்த சாலை மகாபலிபுரத்திற்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக உள்ளது. சென்னை எண்ணூர் துறைமுகத்தில் தொடங்கும் இந்த திட்டம், சிங்கபெருமாள்கோயில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம், பெரியபாளையம், புதுவயல், காட்டுப்பள்ளி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, இறுதியில் மகாபலிபுரத்தில் முடிவடைகிறது.
டெண்டர்: இந்த நிலையில், தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடுக்கான டெண்டர் விட்டுள்ளது. இங்கே புதிய சாலை அமைக்க, சாலை மேம்பாட்டிற்கு டெண்டர் விட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சிங்கபெருமாள்கோயில் வரை பிரிவு-4 (23.8 கி.மீ.) மேம்படுத்த டிபிஆர் தயாரித்தல் தொடர்பாக டெண்டர் விடப்பட்டு உள்ளது. அதேபோல் திருவள்ளூர் புறவழிச்சாலையில் இருந்து வெங்கத்தூர் வரை பிரிவு 3-ன் மறு டெண்டர் விடப்பட்டு உள்ளது.
மாறும் ஓஎம்ஆர்: பரவலாகப் பயன்படுத்தப்படும் பரபரப்பான பழைய மகாபலிபுரம் சாலை அதாவது ஓஎம்ஆர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஈசிஆர் வழித்தடத்திற்கு மாற்றாக, போக்குவரத்து நெரிசல் இல்லாத புதிய பாதையுடன் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. மகாபலிபுரத்தை ஒரு பெரிய சரக்கு போக்குவரத்து துறைமுறைக மையமாக மீண்டும் மாற்றும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. சரக்கு கன்டெய்னர் லாரிகள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், சென்னை-எண்ணூர் துறைமுகத்திற்கு சரக்குகளை எடுத்துச் செல்லவும் சிபிஆர்ஆர் மிகவும் உகந்த பாதையாக இருக்கும்.
துணை நகரம்: இதேபோல் மாமல்லபுரத்தில் துணை கோள் நகரம் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். சென்னைக்கு மிக அருகில் மாமல்லபுரம் உள்ளது. நிறைய கடல் வளம் உள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பகுதியாக உள்ளது. இங்கே துணைக்கோள் நகரம் வரும் பட்சத்தில் இந்த மாமல்லபுரம் மின்சார ரயிலுடன் இணைக்கப்படும். மெட்ரோவும் கூட இங்கே எதிர்காலத்தில் வர உள்ளது.
மெட்ரோ பணிகள் இந்த 20 ஆண்டுகளில் இங்கும் முடிக்கப்படும். தற்போது இங்கே நியூ டவுன் அமைப்பதற்கான கன்சல்டன்சி பணிகளுக்கு டெண்டர் விடுக்கப்பட உள்ளது . விரைவில் இதற்கான திட்ட அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னைக்கு இணையாக சர்வதேச தரத்தில் மாமல்லபுரம் இதன் மூலம் உயர்த்தப்படும். அண்ணா சாலை போல பெரிய சாலைகள், உயர் கட்டிடங்கள், சுற்றுலா அமைப்புகள் இங்கே உருவாக்கப்படும்.
அதேபோல் புதிய நிறுவனங்கள், முதலீடுகள் இங்கே ஈர்க்கப்படும். மேலும் சாலைக்கு கீழே மின்சாரம், ஸ்மார்ட் சிட்டி அமைப்புகள், நவீன கட்டிடங்கள், புதிய பாலங்கள் அமைக்கப்படும். முக்கியமாக இங்கே இருக்கும் கிழக்கு கடற்கரை சாலை வளத்தை பயன்படுத்திக்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications