ஐ.நா. மனித உரிமைகள் சபை: இலங்கை வாக்கெடுப்பில் பங்கேற்காத இந்தியா- தமிழர் தலைவர்கள் கடும் கண்டனம்
சென்னை: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான 6 நாடுகள் தீர்மானம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனால் இத்தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய அரசு ஏற்காதது மன்னிக்க முடியாத துரோகம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடியுள்ளார்.
இலங்கை இறுதி யுத்தத்தின் போது சிங்கள ராணுவம் நிகழ்த்திய போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணை தேவை என்பது உலகத் தமிழர்களின் கோரிக்கை. இதனையே சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்களும் வலியுறுத்துகின்றனர்.

6 நாடுகளின் தீர்மானம்
இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டங்களில் தீர்மானங்கள் கொண்டுவருவதும் அதில் இலங்கை தொடர்ந்து வெற்றி பெறுவதும் வாடிக்கையான ஒன்று. இந்த நிலையில் தற்போதைய ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் பிரிட்டன் உட்பட 6 நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தன.

நிறைவேறிய தீர்மானம்
அதாவது மனித உரிமை மீறல்களை இலங்கை விசாரித்துதான் ஆக வேண்டும் என்பதுதான் இந்த தீர்மானத்தின் சாராம்சம். இதன் மீதான வாக்கெடுப்புக்கு ஆதரவாக 21 நாடுகள் ஓட்டளித்தன. இலங்கையில் அப்படி ஒரு விசாரணையே தேவை இல்லை என சீனா, பாகிஸ்தான் உட்பட 11 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.

ஆப்சென்ட் இந்தியா
இந்தியா, ஜப்பான் உட்பட 14 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இத்தனைக்கும் இன்று காலை ராஜ்யசபாவில், இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை வலியுறுத்தினார். தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும் இந்த விவகாரம் பிரச்சனையாகும் என்பதை யூகித்தே அதிமுக இதனை சுட்டிக்காட்டியது.

தமிழகம் அதிர்ச்சி
முன்னதாக தமிழக அரசியல் தலைவர்களான ப. சிதம்பரம், ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்தனர். ஆனாலும் தமிழகத்தின் குரலுக்கு இந்திய அரசு செவிவாய்க்காமல் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளது. இது தமிழருக்கு மோடி அரசு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என்கிறார் மதிமுக பொதுச்செயலர் வைகோ.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications