பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குமரி டாப் 97.22% தேர்ச்சி.. வேலூர் கடைசி இடம்
10ம் வகுப்பில் 97.22% தேர்ச்சியுடன் குமரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 79.87% தேர்ச்சி மட்டுமே பெற்று வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது.
சென்னை: 10ம் வகுப்பில் 97.22% தேர்ச்சியுடன் குமரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 79.87% தேர்ச்சி மட்டுமே பெற்று வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு 90.7 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Recommended Video
தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த ப்ளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிட்டார்.
10ம் வகுப்பு பொதுத் தேர்வை 9,12,620 பேர் எழுதி உள்ளனர். ஒட்டு மொத்தமாக 10ம் வகுப்பில் 8,21,994 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பில் 4,52,499 மாணவிகளும் 4,60,120 மாணவர்களும் 3ம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 90.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 85.8% பேரும் மாணவிகள் 94.38% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10ம் வகுப்பில் 97.22% தேர்ச்சியுடன் குமரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம் 97.12%, விருதுநகர் 95.96% பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது.
79.87% தேர்ச்சி மட்டுமே பெற்று வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது.10ம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். ஆங்கிலம் பாடத்தில் 45 பேரும் கணிதப்பாடத்தில் 2186 பேரும், அறிவியல் பாடத்தில் 3841 பேரும் சமூக அறிவியல் பாடத்தில் 1009 பேரும் நூற்றுக்குநூறு செண்டம் மதிப்பெண் பெற்றுள்ளனர். 10ம் வகுப்புத் தேர்வில் 85.25% அரசுப் பள்ளிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று கூறினார்.
ஜூன் 24ம் தேதி முதல் மாணவர்கள் தற்காலிக சான்றிதழ்களை தரவிறக்கம் செய்துகொள்ளலாம். 10ம் வகுப்புக்கான துணைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி தொடங்கும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications