கத்தார் உலகக்கோப்பை.. சாதித்த தமிழக ஸ்ட்ரீட் கால்பந்து அணி! வீராங்கனைகளை வாழ்த்திய முதலமைச்சர்
சென்னை: கத்தாரில் வரும் 20 ஆம் தேதி நடைபெறும் பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் சூழலில் அங்கு நடைபெற்ற தெருவோரக் குழந்தைகளுக்கான கால்பந்து உலகக்கோப்பையில் காலிறுதி வரை முன்னேறி அசத்தியுள்ள தமிழக அணி.
உலக கால்பந்து ரசிகர்களால் உற்று நோக்கப்படும் விளையாட்டு திருவிழாவான 2022 பிபா உலகக்கோப்பை தொடர் அரபிய நாடான கத்தாரில் வரும் நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது.
வரும் டிசம்பர் 18 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் விளையாடும் சர்வதேச அணிகள் கத்தாரில் குவிந்து இருக்கின்றன. ஏற்கனவே தகுதிச்சுற்று போட்டிகள் அங்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன.

கத்தார்
வளைகுடாவில் இருக்கும் சிறிய நாடான கத்தார் 1963 ஆம் ஆண்டு பிபாவின் அங்கீகாரத்தை பெற்றது. ஆனால் ஒருமுறைக்கூட அந்த நாடு உலகக்கோப்பை கால்பந்து தொடரில் விளையாட தகுதி பெற்றதே இல்லை. ஆனால், இந்த ஆண்டு தொடரை நடத்துவதால் முதல்முறையாக கத்தார் அணி உலகக்கோபை தொடரில் விளையாடுகிறது.

முதல் போட்டி
இவை அல்லாமல் நடப்பு சாம்பியனான பிரான்ஸ், பிரேசில், அர்ஜெண்டினா, பிரிட்டன், ஜெர்மனி, போர்சுகல், சிலி, க்ரீஸ், இத்தாலி உள்ளிட்ட பல முன்னணி அணிகளும் விளையாட இருக்கின்றன. முதல் போட்டியில் கத்தார் அணி ஈடுவடார் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக உருவாக்கப்பட்ட 60 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் பிரம்மாண்டமான அல் பேத் மைதானத்தில் இந்த போட்டி நடத்தப்பட உள்ளது.

220 பில்லியனு
உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கு பெரிய கட்டமைப்புகளை இல்லாத நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக அதற்கான திட்டங்களை வகுத்து உள்கட்டமைப்பு பணிகளை கத்தார் மேற்கொண்டு இருக்கிறது. இதற்காக 220 பில்லியன் டாலர்களை கத்தார் அரசு செலவிட்டு இருக்கிறது.

உள்கட்டமைப்பு
அதன் மூலம் 8 கால்பந்து மைதானங்கள், நெடுஞ்சாலைகள், நட்சத்திர விடுதிகள், விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் சேவை, சுரங்க பாதைகள் என உள்கட்டமைப்புகளை அமைத்து நாட்டையே மாற்றி இருக்கிறது கத்தார் அரசு. கத்தாரின் இந்த அபரிமித மாற்றத்தை பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

பெரும் பொருட்செலவு
இதன் மூலம் கால்பந்து வரலாற்றிலேயே அதிக செலவில் நடத்தப்படும் உலகக்கோப்பை தொடர் என்ற பெருமையை கத்தார் உலகக்கோப்பை பெற்று உள்ளது. 8 பிரிவுகளாக நடத்தப்படும் லீக் சுற்று போட்டிகளில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் குரூப் டி பிரிவிலும், ஜெர்மனி குரூப் டி பிரிவிலும், பிரேசில் குரூப் ஜி பிரிவிலும், போர்ச்சுகல் குரூப் எச்- இல் இடம்பெற்று இருக்கின்றன.

தமிழக பெண் குழந்தைகள்
இப்படி உலகமே கத்தாரை நோக்கி தனது பார்வையை திருப்பி இருக்க அங்கு சென்று அசத்தி இருக்கிறார்கள் தமிழக பெண் குழந்தைகள். கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற தெருவோரக் குழந்தைகளுக்கான கால்பந்து உலகப் கோப்பை போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டை சேர்ந்த கருணாலயா பெண் குழந்தைகள் அணியினர் காலிறுதிக்கு தகுதி பெற்று உள்ளனர். இவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.












Click it and Unblock the Notifications