TET exam: டெட் தேர்வுக்கு இன்னும் விண்ணப்பிக்கவில்லையா? கவலையை விடுங்க.. கால அவகாசம் நீட்டிப்பு!
சென்னை: டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று மதியத்திற்கு பிறகு டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆன்லைன் இணையதளம் முடங்கியது. ஒரே நேரத்தில் அதிகமானோர் விண்ணப்பிக்க முயன்றதால் இணையதளம் முடங்கியது. இதனால் விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்த நிலையில் தான் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு தற்போது டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் மட்டுமே ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்த நிலையில் கடந்த மாதம் டெட் தேர்வு அறிவிப்பு வெளியானது. பலரும் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். இதற்கிடையே கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் பணிபுரிய முடியும் என்றும், கடைசி 5 ஆண்டுகள் மட்டுமே பணி உள்ளவர்கள் தவிர்த்து மற்ற அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று உத்தரவிட்டது.
இதனால் டெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது. இன்று தான் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் பலரும் விண்ணப்பிக்க முயன்றனர். ஒரே நாளில் அதிகமானோர் விண்ணப்பிக்க முயன்றதால் இணையதளம் முடங்கியது. இதனால் விண்ணப்பதாரர்கள் கடும் சிரமமடைந்தனர்.
இந்த நிலையில் தான் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி வரும் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வு வரும் நவம்பர் மாதம் 15, 16 ஆம் தேதிகளில் நடைபெறும்.
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications