Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1,200 மருத்துவ சீட் பறிபோகும் சூழல்.. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு: மா சுப்பிரமணியன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் 1200 முதுநிலை மருத்துவ இடங்கள் பறிபோகும் சூழல் உள்ளது என்றும், மருத்துவ மாணவர் இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய், சுதான்ஷு துலியா மற்றும் எஸ்.வி.என். பாட்டீல் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிட அடிப்படையிலான இடஒதுக்கீடு (Residence based reservation) என்பது கூடாது என்றும், இது அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவை மீறுவதாகும் எனவும் தெரிவித்திருந்தனர்.

ma subramanian reservation tn government

இந்நிலையில் சென்னையில் இன்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது உச்ச நீதிமன்றத்தின், இட ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பு தொடர்பாகப் பேசினார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசனை செய்யப்படும். இந்த தீர்ப்பின் நகல் வந்துள்ளது. அதனை வைத்து துறை அலுவலர்களுடன் பேசப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் உரிமைகள் எந்த இடத்திலும் பாதிக்கப்படக்கூடாது.

இந்த தீர்ப்பு முதுநிலை மருத்துவப் படிப்பில் அரசுப் பணியில் இருக்கக்கூடிய மருத்துவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் முதுநிலை மருத்துவர் சேர்க்கை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.

அரசு மருத்துவர்களுக்கு, இட ஒதுக்கீட்டு முறையில் வழங்கப்படும் ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு ஏற்படும். சிறுபான்மையினர் நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் முழுமையாக பாதிக்கப்படும். இதன் காரணமாக 1,200 முதுநிலை மருத்துவ இடங்கள் தமிழகத்தில் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 69% இடஒதுக்கீட்டுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். மருத்துவ மேற்படிப்புகளில் கிட்டத்தட்ட 2,200-க்கும் மேற்பட்ட இடங்கள் தமிழக அரசின் வசம் இருக்கிறது. 1,200 முதுநிலை மருத்துவ இடங்கள் பறிபோகும் அபாயம் உள்ளது. இந்த இடங்களைப் பறித்து மற்றவர்களுக்குத் தர வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்படுகிற சூழ்ச்சியாகத்தான் இதைப் பார்க்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் மாநில உரிமைகள் பாதிக்கப்படுவதுடன், மாநிலத்தின் உள் இட ஒதுக்கீடுகள் கேள்விக்குறியாகும். தமிழ்நாட்டில் மாநில உரிமைகள் எந்த இடத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியாக உள்ளார்.

மற்ற மாநிலங்களுடன் இதுதொடர்பாக பேசுவதில் இருக்கும் சிரமம் என்னவென்றால், இங்கு BC,MBC, வகுப்பில் இடம்பெற்றுள்ள சமூகங்கள், மற்ற மாநிலங்களில் இருப்பது இல்லை. இங்கு சாதகமாக இருக்கும் அம்சங்கள் மற்ற மாநிலங்களில் இருப்பவர்களுக்கு பாதகமாக இருக்கும். நமக்கு பாதகமாக இருப்பவை அவர்களுக்கு சாதகமாக இருக்கும். எனவே, இதில் மற்ற மாநிலங்களை ஒருங்கிணைப்பது சரியாக இருக்காது. தமிழகத்தின் உரிமைகள் பறிபோகக்கூடாது.

இந்தாண்டு சேர்க்கைக்கு இது பொருந்தாது என்று கூறியுள்ளனர். அடுத்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆனதுதான் இந்த தீர்ப்பு. அதற்குள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து, மாநில உரிமைகள் பாதிக்கப்படாமல் இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்வோம் " எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+