தமிழகத்தில் அரசு ஏ.சி பஸ்கள் எப்போது இயக்கப்படும்?.. 'ஜில்' அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!
சென்னை: தமிழகத்தில் அக்டோபர் 1-ம் தேதி முதல் அரசு ஏ.சி பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் இறுதியில் தொடங்கி 2 மாதங்களுக்கு கொரோனா தொற்று பாடாய்படுத்தியது.
தினமும் 31,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகின. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைகள் தட்டுப்பாடு என்று இக்கட்டான நிலை நிலவியது.

பேருந்து சேவை நிறுத்தம்
இதனால் தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கு போடப்பட்டது. அத்தியாவசிய கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அரசு பேருந்து, தனியார் பேருந்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசு எடுத்த நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாகவும், மக்களின் ஒத்துழைப்பு காரணமாகவும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தது.

இயல்பு நிலை திரும்பியது
இதனால் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டன. முதலில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும், அதன்பிறகு மற்ற மாவட்டங்களிலும் அரசு, தனியார் பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்பட்டது. இதேபோல் சென்னை, கோவை போன்ற நகரங்களுக்கு விரைவு பேருந்து சேவை தொடங்கின.
அதன்பின்னர் தமிழகம் முழுவதும் பேருந்து சேவை சீரானது. முதலில் இரவு குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே பேருந்துகள் இயக்க வேண்டும் என்று கூறிய நிலையில் அந்த கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டது.

கேரளாவுக்கு பஸ்கள் இல்லை
இதனை தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும் தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படுகிறன. கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அண்டை மாநிலமான கேரளாவுக்கு மட்டும் பஸ்கள் நேரடியாக இயக்கப்படவில்லை. இதேபோல் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வந்த அரசு ஏ.சி பஸ்களும் இயக்கப்படவில்லை. சாதாரண பேருந்தை விட ஏ.சி பேருந்தில் சிறிது கூடுதலாக மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் ஏ.சி பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ஏ.சி பஸ்கள் இயக்கப்படும்
இந்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்றுள்ள தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், தமிழகத்தில் அக்டோபர் 1-ம் தேதி முதல் அரசு ஏ.சி பேருந்துகள் இயக்கப்படும் என்று குளிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 1-ம் தேதி முதல் 702 ஏ.சி பேருந்துகள் தமிழகத்துக்குள்ளும், வெளிமாநிலங்களுக்கும் இயக்கப்படும் என்று அவர் கூறி இருக்கிறார். அதன்படி தமிழகத்தின் சிறு நகரங்களுக்கு இடையேயும், சென்னை, கோவை போன்ற தொலைதூர நகரங்களுக்கு இடையேயும் ஏ.சி பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதேபோல் கேரளாவை தவிர கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கும் ஏ.சி பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications