வானத்தில் ஃபேர்வெல்.. Depression-ஐ வழியனுப்ப திரண்ட மேகங்கள்.. ஒரு மணிநேரம்தான்.. வெதர்மேன்
சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடைசியாக சென்னையில் மேகம் சூழ கனமழை பெய்யும். இது ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே நீடிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே சென்னை அருகே கரையை கடக்கிறது.
எனவே அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை வழியனுப்ப கடைசியாக மேகக் கூட்டங்கள் கூடியுள்ளன. இதனால் சென்னையில் கடைசியாக ஒரு முறை கனமழை பெய்யக் கூடும்.

ஏரிகளில் நீர் வரத்து
இது ஒரு மணி நேரம் மட்டுமே நீடிக்கும். இல்லாவிட்டால் இன்னும் கூட சிறிது நேரம் நீடிக்க வாய்ப்புள்ளது. மற்றபடி அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. இதனிடையே ஏரிகளில் நீர்வரத்தும் வெளியேற்றம் வெள்ளத்திற்கேற்ப கண்காணிக்கப்படுகிறது. பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 7,893 நீர் வரத்தும் 6,226 கனஅடி வெளியேற்றமும் நடைபெறுகிறது. இந்த அணை 76 சதவீதம் நிரம்பியுள்ளது.

கனஅடி நீர்
அத போல் புழல் ஏரிக்கு வினாடிக்கு 6,273 கனஅடி நீர் வருகிறது. 3,281 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த அணை 88 சதவீதம் நிரம்பியுள்ளது. சோழவரம் ஏரியில் 3,625 கனஅடி நீர் வரத்தும், 2015 கனஅடி நீர் வெளியேற்றமும் நடைபெறுகிறது. அந்த அணை 84 சதவீதம் நிரம்பியுள்ளது. செம்பரம்பாக்கத்தில் 5,055 கனஅடி நீர் வரத்தும், 2,151 கனஅடி நீர் வெளியேற்றமும் உள்ளது. இந்த அணை 76 சதவீதம் நிரம்பியுள்ளது.

மழை அளவு
பூண்டி ஏரிக்கு நிறைய நீர் வரத்து வர வாய்ப்புள்ளது என்றும் அவை வினாடிக்கு 7000 கனஅடியாக இருக்கலாம் என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இன்று காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை கத்திவாக்கத்தில் 21 மி.மீ. மழையும் எம்ஆர்சி நகரில் 14 மி.மீ. மழையும் நுங்கம்பாக்கத்தில் 11 மி.மீ மழையும் தரமணியில் 10 மி.மீ. மழையும் மீனம்பாக்கத்தில் 10 மி.மீ. மழையும் சோளிங்கநல்லூரில் 9 மி.மீ. மழையும் மேற்கு தாம்பரத்தில் 7 மி.மீ.மழையும் வில்லிவாக்கத்தில் 6 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
Recommended Video

அச்சம்
இந்த மழை போனாலும் அடுத்து நவம்பர் 13 ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா இல்லை இதே போல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கனமழையை தருமா என நிறைய பேர் அச்சத்தில் உள்ளார்கள். நாளை முதல் படிப்படியாக குறையும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் இந்த வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என தெரியவில்லை.












Click it and Unblock the Notifications