Exclusive: சென்னையில் திடீர் மழைக்கு காரணம் என்ன? அடுத்த மழை எப்போது?.. தமிழ்நாடு வெதர்மேன் பதில்!
சென்னை: சென்னையில் திடீரென மழை பெய்தது ஏன் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார்.
Recommended Video
நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை கொட்டியது. பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒன் இந்தியா தமிழ் தளத்திற்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில் இது திடீர் மழை அல்ல. பொதுவாக ஜூன் மாதம் சென்னையில் 60 மி.மீ. மழை பதிவாகும். அதை இந்த மாதம் பெற்றுள்ளோம்.

வளி மண்டல மேலடுக்கு
ஹைதராபாத் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் இந்த மழை பெய்துள்ளது. மேலும் வடதமிழகத்தின் சென்னை பகுதியில் காற்று வீசியதாலும் இந்த மழை பெய்துள்ளது.

மேகக் கூட்டங்கள்
வடக்கு பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மேகக் கூட்டங்கள் நீண்ட நேரமாக இருந்தன. இதனால்தான் இன்று காலை 10 மணி வரை சென்னையில் மழைத் தூறல் இருந்தது. இதற்கு மேல் மழை பெய்யாது. ஜூன் 29, 30 ஆகிய தேதிகளிலும் மழை இருக்காது.

பிரதீப் ஜான்
பெரிய பெரிய மேகக் கூட்டங்கள் கலைந்து சென்றவுடன் சூரியன் மெல்ல எட்டிபார்க்கும். சென்னையில் அடுத்த மழை ஜூலை முதல் வாரத்தில் வெப்பச்சலனத்தால் ஏற்படும் என வெதர்மேன் பிரதீப் ஜான தெரிவித்துள்ளார்.

மழை
கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வந்த நிலையில் நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவியது. மக்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
-
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications