நாளை மறுநாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி செயற்குழு கூட்டம்.. தேதியை அறிவித்த செல்வப்பெருந்தகை
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் சென்னை சத்தியமூர்த்திபவனில் நடைபெற உள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்பட பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் சென்னை தேனாம்பேட்டையில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் திடீரென இந்த கூட்டமானது ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் டெல்லி உயர்நிலைக் கூட்டத்தில் நேற்று கலந்துகொண்டிருந்தனர். இதனால் இந்த செயற்குழு கூட்டமானது தேதி குறிப்பிடபடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடைபெறும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தின் போது சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனவும் சட்டமன்ற தேர்தல் ஆயத்த பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் மத்திய மாநில அரசுகளின் தற்போதைய செயல்பாடுகள், மக்கள் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ் ராஜேஷ்குமார், எம்எல்ஏ, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்என் ஹெக்டே, நிவேதித் ஆல்வா உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
திமுக காங்கிரஸ் கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேச வேண்டாம் என்று நேற்று ராகுல் காந்தி கூறியிருந்தார் என்றும், கூட்டணி பற்றி தலைமையே முடிவு செய்யும் என்றும் செல்வப்பெருந்தகை நேற்று கூறியிருந்தார். இந்த பரபரப்பான சூழலில் நாளை மறுநாள் நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications