அண்ணாமலை எந்த விஷயத்தை கையில் எடுத்தாலும் சக்சஸ் ஆகவில்லை பார்த்தீர்களா.. கே.எஸ்.அழகிரி சுளீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எல்லை மீறி கற்பனை செய்து வருவதாகவும் எதிர்காலமே இல்லாத ஒரு கட்சி என்றால் அது பாஜக தான் எனவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார்.

அண்ணாமலையின் பேச்சுக்கள் அனைத்தும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பாஜக அலுவலகம்

பாஜக அலுவலகம்

பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அதற்குப் பிறகும் இதில் மிகப்பெரிய சதி நடந்திருப்பதாக அண்ணாமலையும், மற்றவர்களும் கற்பனைகளை நாள்தோறும் அவிழ்த்து விடுகிறார்கள். இதை வைத்துக் கொண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடலாம் என பா.ஜ.க. கனவு காண்கிறது.

 உரிய பாடம்

உரிய பாடம்

ஆனால், மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் எத்தகைய படுதோல்வியை தமிழக மக்கள் பா.ஜ.க., அ.தி.மு.க.விற்கு வழங்கினார்களோ, அதைவிட கூடுதலான தோல்வியை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும்; வழங்கப் போவது உறுதி. இதன்மூலம் உரிய பாடத்தை பா.ஜ.க., அ.தி.மு.க. பெறப்போகிறது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி

அரசியல் காழ்ப்புணர்ச்சி

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும், தமிழக முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட பா.ஜ.க.வின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி. அமைப்பினர் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். எந்த பிரச்சினையிலும் தமிழக மக்களின் கவனத்தை ஈர்ப்பத்தில் படுதோல்வி அடைந்து வருகிற தமிழக பா.ஜ.க., இப்பிரச்சினையை கையில் எடுத்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களது வீட்டை முற்றுகையிட முயன்றது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயலாகும்.

மக்கள் படும் துன்பம்

மக்கள் படும் துன்பம்

உச்சநீதிமன்றத்தில் உரிய ஆணை வழங்கிய பிறகும் முதலமைச்சரிடம் நீதி கேட்டு போராடுவது எந்த வகையிலும் ஏற்கக் கூடியது அல்ல. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மத்தியில் மோடி தலைமையில் நடைபெறும் ஆட்சி இன்னும் 80 ஆண்டுகள் நீடிக்க வேண்டுமென்று மக்கள் நினைப்பதாக அண்ணாமலை பேசியிருக்கிறார். அண்ணாமலையின் கற்பனை எல்லை இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. எட்டு ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் நாட்டு மக்கள் படும் துன்பத்திற்கு அளவே கிடையாது. இந்நிலையில் அண்ணாமலையின் பேச்சு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே இருக்கிறது.

மோடி அரசு

மோடி அரசு

பா.ஜ.க.வை தமிழகத்தில் வேரூன்ற முடியாமல் மக்கள் புறக்கணித்து வருகிறார்கள். தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கிற நீட் தேர்வை ஆதரிக்கின்ற தமிழக விரோத கட்சியாக பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. என்றைக்குமே தமிழகத்தில் பா.ஜ.க. நுழைய முடியாது என்ற தலைவர் ராகுல்காந்தி அவர்களின் கூற்று உறுதிப்படுகிற வகையில் தமிழக பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. அதற்கு மோடி அரசு துணை போகிறது.

எதிர்காலம் இல்லை

எதிர்காலம் இல்லை

எனவே, தமிழக மக்களின் நலனிற்கு விரோதமாக செயல்படுகிற அண்ணாமலை, எந்தப் பிரச்சினையை கையில் எடுத்தாலும் எந்தவித பலனும் கிடைக்காமல் அவருக்கு எதிராகவே போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் எதிர்காலமே இல்லாத ஒரு கட்சியாக பா.ஜ.க. விளங்கி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+