பி.இ., படிக்க அப்ளை பண்ணியிருக்கீங்களா? சர்டிபிகேட் அப்லோடு பண்ண இன்றே கடைசி நாள்
பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், சான்றிதழ்களை பதிவேற்ற இன்று கடைசிநாளாகும். நாளை ரேண்டம் எண்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்றும் மாணவர்கள் தங்களின் சான்றிதழ் பதிவேற்றும் பணி ஜூலை 31ஆம் தேதி தொடங்கியது. இதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 11ஆம் தேதி கடைசி நாள் என்று கூறப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. இன்றே கடைசி நாள் என்பதால் மாணவர்கள் உடனடியாக பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Recommended Video
தமிழக பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஜூலை 15ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

முதல் வாரத்தில் ஏராளமானோர் விண்ணப்பித்தனர். அடுத்தடுத்த வாரங்களில் விண்ணப்பங்களின் எண்ணிக்கை, ஒரு நாளைக்கு இரண்டாயிரத்திற்கு மேல் இருந்தது. ஆகஸ்ட் 16ஆம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாளாகும். இதுவரை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 507 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதுவரை 1லட்சத்து 33ஆயிரம் பேர் விண்ணப்பக்கட்டணம் செலுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 33ஆயிரத்து 116 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், இந்த ஆண்டு 27 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பம் செய்துள்ளனர். இணையதளம் மூலமே சான்றிதழ் பதிவேற்றம் மற்றும் சரிபார்ப்புக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச்சான்றிதல், வசிப்பிட சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், தமிழ்நாட்டு மாணவர்கள் பிளஸ் 1 மதிப்பெண் சான்றிதழையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்றும் மாணவர்கள் தங்களின் சான்றிதழ் பதிவேற்றும் பணி ஜூலை 31ஆம் தேதி தொடங்கியது. இதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 11ஆம் தேதி கடைசி நாள் என்று கூறப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. இன்றே கடைசி நாள் என்பதால் மாணவர்கள் உடனடியாக பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications