Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பி.காம் படிப்பில் சேர ஆர்வம்..பொறியியல் கட் ஆஃப் மதிப்பெண் குறையும்..கல்வியாளர்கள் கூறும் காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் நடப்பாண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்வதற்கு மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொறியியல் கட்-ஆப் மதிப்பெண் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தேர்வு எழுதிய 94 சதவிகித மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் கணித பாடத்தில் 690 பேர் மட்டும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும்.

TNEA Counselling cut off marks will decrease Reason given by academics

கடந்த ஆண்டில் 1,858 பேர் கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று இருந்த நிலையில், இந்த ஆண்டு சுமார் 3 பங்கு சென்டம் குறைந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வேதியியல், இயற்பியல் போன்ற முக்கிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கணினி அறிவியல் பாடத்தில் கடந்த ஆண்டு 3,827 பேர் சென்டம் பெற்றிருந்தனர். அது இந்த ஆண்டு 4,618 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 8,544 மாணவ-மாணவிகள் அதிகமாக 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர். பிளஸ்-2 தேர்வில் கணித அறிவியல், இயற்பியல், வேதியியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் 200 மதிப்பெண்ணாக குறைக்கப்பட்டு (கணிதம் 100, வேதியியல்+ இயற்பியல் 100 மதிப்பெண்) அடிப்படையில் பொறியியல் தர வரிசை பட்டியல் தயாரிக்கப்படும்.

இந்த ஆண்டு கணித பாடத்தில் சென்டம் வாங்கியவர்கள் எண்ணிக்கை குறைந்தாலும் கூட வேதியியல் பாடத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 2 மடங்கு பேர் கூடுதலாக முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தரவரிசை பட்டியலை பொறுத்தவரை இயற்பியல், வேதியியலை விட 2 மடங்கு கூடுதல் முக்கியத்துவம் கணித பாடத்திற்கு கொடுக்கப்படுகிறது. எனவே பொறியியல் கட்-ஆப் மதிப்பெண் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு அனைத்து போர்டுகளையும் உள்ளடக்கிய ரேங்க் பட்டியலில் 134 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். இந்த ஆண்டு கணித பாடத்தில் சென்டம் வாங்கியவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்திருப்பதோடு, அந்த பாடத்தில் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளதால் பொறியியல் படிப்பிற்கான கவுன்சிலிங்கில் கட்-ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதாகவும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

அதே நேரத்தில் கணக்கு பதிவியல் மற்றும் வணிகவியல் பாடங்களில் சென்டம் வாங்கியவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் நகர கல்லூரிகளில் பி.காம் இடங்களை பெறுவதற்கு கடும் போட்டி நிலவும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர். கணக்கு பதிவியலில் 6,573 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 44 சதவீதம் அதிகமாகும்.

இதே போல வணிகவியலில் 5,678 பேர் சென்டம் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 22 சதவீதம் அதிகமாகும் என தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியுள்ளார். ஒட்டு மொத்தமாக வேதியியல், கணித அறிவியல் போன்ற பாடங்களிலும் குறைந்தது ஒரு பாடத்திலாவது முழு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 35 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும்
ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.

இதனிடையே 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 1 ,07,395 இளநிலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு முதல் நாளிலேயே 18,322 பேர் ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர். வரும் மே 19 ந் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்வதற்கு மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+