‛ரேண்டம் எண்’ வெளியீடு.. இன்ஜினியரிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்களை நோட் பண்ணுங்க.. எப்படி பார்ப்பது?
சென்னை: தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புகளில் மாணவர்கள் சேர விண்ணப்பம் செய்தவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரேண்டம் எண்ணை மாணவ-மாணவிகள் எப்படி பார்ப்பது? என்பது பற்றிய விவரம் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புகளில் சேர 2 விதமான நடைமுறை உள்ளது. ஒன்று நேரடியாக கல்லூரி சென்று அட்மிஷனில் பங்கேற்கு பணம் செலுத்தி படிப்பது.

இன்னொறு மறை என்னவென்றால் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சிலிங்கில் பங்கேற்கு ஒவ்வொரு கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீடு செய்த இடங்களில் சேர்ந்த படிப்பது.
இதில் கல்லூரியில் நேரடியாக படிப்பது என்பது கூடுதல் செலவை ஏற்படுத்தும். அதேவேளையில் கவுன்சிலிங் வழியாக கல்லூரியை தேர்வு செய்து படிப்பது என்பது செலவை கொஞ்சம் குறைக்கும். அரசு கல்லூரிகளில் கூட இடம் கிடைக்கும். அதன்படி இந்த ஆண்டு பிஇ, பிடெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் மே 7ம் தேதி தொடங்கியது.
இந்த விண்ணப்ப பதிவு ஒரு மாதம் வரை நடந்தது. கடந்த 6-ந்தேதி விண்ணப்ப பதிவு முடிவுக்கு வந்தது. மொத்தம் 3 லட்சத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் விண்ணப்பம்செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த முறை மாணவ-மாணவிகள் மத்தியில் இன்ஜினியரிங் படிப்புக்கான மவுசு அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கடந்த 9 ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. விண்ணப்பித்த மாணவர்களுக்கு விரைவில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் அதுபற்றிய அறிவிப்பு வெளியாகும். அதன்படி முதற்கட்டம், 2ம் கட்ட என்று பல்வேறு கட்டங்களாக கவுன்சிலிங் நடைபெறும்.
இந்நிலையில் தான் இன்ஜினியரிங் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனியான 10 இலக்க எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் tneaonline.org என்ற இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம் என என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications