"டிரான்ஸ்பார்மர் கொள்முதல்.." ரூ.396 ஊழல் புகார்.. உண்மையில் நடந்தது என்ன? மின்வாரியம் பரபர விளக்கம்
சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தில் சுமார் ரூ.400 கோடி மதிப்பில் ஊழல் நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், இது குறித்து தமிழ்நாடு மின்வாரியம் விளக்கமளித்துள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல ஊழல் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதில் ரூ.397 கோடிக்கு ஊழல் நடந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இரண்டு ஆண்டுகளில் 45 ஆயிரம் டிஸ்ட்ரிபியூஷன் ட்ரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்தாக குற்றஞ்சாட்டினர். இதில் சுமார் 30 நிறுவனங்கள் ஒரு ரூபாய் கூட மாறாமல் ஒரே விலையைக் கோரியிருந்ததாகப் புகார் அளித்தனர்.

தமிழ்நாடு வாரியம்: இது தொடர்பான ஆவணங்களையும் அவர்கள் வெளியிட்டிருந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக மின்வாரியம் இப்போது விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அந்த விளக்கத்தில், "அனைத்து ஒப்பந்த புள்ளிதாரர்களும் ஒரே விலைப்புள்ளியைக் குறிப்பிட்டுள்ளதால், மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மின்மாற்றிகளை விற்பனை செய்து வருகின்றன. கடந்த 2011-ம் ஆண்டு முதல் மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்ட கோப்புகளைப் பரிசீலனை செய்ததில் பெரும்பாலான நிறுவனங்கள் ஒரே விலைப்புள்ளியைச் சமர்ப்பித்துள்ளது தெரியவருகிறது.
விலைப்புள்ளி: மின்மாற்றிகள் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும், சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை உள்ள 44 மின் பகிர்மான வட்டங்களுக்கு மின்மாற்றிகளை எடுத்துச் சென்று வழங்குவதால், அவை சரக்கு வாகன கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும், சில நிறுவனங்கள் உள்ளூரிலேயே பல வருடங்களாக இயங்கி வருவதால், அவர்களுக்கு மற்ற நிறுவனங்களின் விலைப்புள்ளிகள் குறித்துத் தெரிய வாய்ப்புள்ளது.
ஒப்பந்த விலைப்புள்ளிகள் அனைத்தும் கணினி மூலமாகவே பெறப்படுகிறது. எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஒரே விலைப்புள்ளியைச் சமர்ப்பித்திருந்தாலும், தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி வெளிப்படைத்தன்மை சட்டத்தின்படி தமிழக மின்வாரியத்திற்குத் தேவையான மின்மாற்றிகளைத் தகுதி வாய்ந்த அனைத்து சிறு, குறு நிறுவனங்களுக்கும் பிரித்து வழங்கி கொள்முதல் ஆணை அளிக்கப்பட்டுள்ளது.
சரியான நடைமுறை இல்லை: மின்மாற்றி தயாரிக்கும் நிறுவனங்கள் ஒரே மாதிரி விலைப்புள்ளி கோருவது கடந்த இரு ஆண்டுகளில் நிகழும் நிகழ்வுகள் அல்ல. இந்த நடைமுறை, கடந்த 10 வருடங்களுக்கும் மேலாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. ஒப்பந்தப் புள்ளிகளைப் பரிசீலனை செய்யும் போது அன்றைய தேதியில் ஜெம் போர்டல் விவரக் குறியீடுகள் கொண்ட விலையை ஒப்பிட்டுத் தான் ஒப்பந்தப் புள்ளி வழங்கப்பட்டுள்ளது. அதை இன்றைய தேதியில் இருக்கும் ஜெம் போர்டல் விலையை எடுத்து ஒப்பீடு செய்துள்ளது சரியான நடைமுறை இல்லை.
தமிழ்நாடு அரசு மின்வாரியத்தால் கொள்முதல் செய்யப்படும் மின்மாற்றிகள் உத்தரவாத காலம் 5 ஆண்டுகள் ஆகும். கேரளா மாநிலத்தில் கொள்முதல் செய்யப்படும் மின்மாற்றிகளுக்கான உத்தரவாத காலம் 3 ஆண்டுகள் ஆகும். தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்முதல் செய்யும் மின்மாற்றிகளின் விவரக் குறியீடு முற்றிலும் தனித்துவம் வாய்ந்தது. ஆகவே கேரள மாநிலத்தில் கொள்முதல் செய்யும் மின்மாற்றிகளோடு ஒப்பீடு செய்ய இயலாது.
கொள்முதல்: கேரளா மாநிலத்தில் கொள்முதல் செய்யப்படும் மின்மாற்றிகளில் அலுமினியம் மின் சுருள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்முதல் செய்யும் மின்மாற்றிகளில் காப்பர் மின் சுருள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் கூடுதலாக ஒரு மின்மாற்றிக்கு ரூ. 1.66 லட்சம் (அலுமினிய மின் சுருளின் விலையைச் சேர்த்து) செலவாகிறது. எனவே, கேரளாவுடன் இதை ஒப்பிடுவது சரியாக இருக்காது.
நீண்ட கால பயனைக் கருத்தில்கொண்டு காப்பர் மின் சுருள், 5 வருட உத்தரவாதம், மின்சார வாரியம் நிர்ணயம் செய்யப்படும் விவரக் குறியீடுகளின் அடிப்படையிலேயே நிறுவனங்கள் மின்மாற்றிகளை உற்பத்தி செய்து வழங்குவதால், தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்முதல் செய்யும் மின்மாற்றிகளின் தரம் உயர்வாக இருக்கிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications