மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மின்சாரத்துறை சர்ப்ரைஸ் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.. தமிழகத்தில் ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக நிலவி வரும் சூழலை கருத்தில் கொண்டு, இந்த உத்தரவை மின்வாரியம் பிறப்பித்துள்ளது. ஏற்கனவே கேஸ் தட்டுப்பாடு உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில், மின்சார வாரியம் தந்துள்ள இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது.

சர்வதேச அளவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் உணவகங்கள் தங்கள் மாற்றுத் தேவையாக மின்சார அடுப்புகளை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்..

TNEB

தமிழக மின்சார வாரியம்

இந்த திடீர் மாற்றத்தினால் மின்சாரத்திற்கான தேவை வழக்கத்தை விட பன்மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.. எனினும், கேஸ் தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் அவசர அவசிய நடவடிக்கைகளை அரசும் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பொதுமக்களின் பயன்பாடு மற்றும் வணிக நிறுவனங்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மின் உற்பத்தி மற்றும் கையிருப்பு ஆகியவற்றை முன்னதாகவே திட்டமிட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது..

மின்வாரியம் சர்ப்ரைஸ்

சிலிண்டர் தட்டுப்பாட்டினால் ஹோட்டல் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மின்சார அடுப்புகளையே முழுமையாக நம்பியுள்ளனர்.. இதனால் மின் விநியோகத்தில் எவ்வித தொய்வும் ஏற்படாத வண்ணம் மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.. மின் உற்பத்தி நிலையங்களில் போதிய நிலக்கரி கையிருப்பு மற்றும் மாற்று எரிசக்தி ஆதாரங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது..

தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோரின் நலன் கருதி பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.. முதலாவதாக, தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதன் மூலம் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் தொழில் நிறுவனங்களின் இயக்கம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது..

மின் சப்ளை - குட் நியூஸ்

இரண்டாவதாக, மின் தடை குறித்த புகார்களை உடனுக்குடன் சரி செய்ய 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு நிலைக் குழுக்கள் மற்றும் மின்னகம் போன்ற சேவை மையங்கள் மூலம் விரைவான தீர்வுகள் வழங்கப்படுகின்றன..

மூன்றாவதாக, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பிகளில் ஏற்படும் பழுதுகளை முன்கூட்டியே கண்டறிந்து சீரமைப்பதன் மூலம் தரமான மின்சாரம் அனைவருக்கும் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது..

இப்போது மின் தேவை உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளதால், மின்சார வாரிய அலுவலர்கள் மண்டல வாரியாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் மின் பளு அதிகமாகும் இடங்களை கண்டறிந்து அங்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.. எக்காரணம் கொண்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்கக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது..

சென்னை தமிழகத்துக்கு ஹேப்பி

பொதுமக்கள் தங்களது மின் புகார்களை அதிகாரப்பூர்வ எண்கள் மூலம் தெரிவித்தால் அவை முன்னுரிமை அடிப்படையில் சரி செய்யப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது..

இந்த போர் சூழலால் ஏற்படும் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க மின்சார வாரியம் எடுத்துள்ள இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மின் விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்ய உயர்மட்ட அதிகாரிகள் தொடர்ந்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்களாம்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+