TNPSC குரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.. சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது தொடங்குகிறது?
சென்னை: டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த அக். 28ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கிடையே குருப்-4 தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட தேர்வாளர்களின் பட்டியல் இப்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வரும் நவ.9ம் தேதி முதல் தங்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பணிகள் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம், அதாவது டிஎன்பிஎஸ்சி மூலமாகவே நிரப்பப்படும். தமிழ்நாடு அரசின் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி வருடா வருடம் தேர்வுகளை நடத்தி வருகிறது.

டிஎன்பிஎஸ்சி க்ரூப் தேர்வுகளைப் பொறுத்தவரை அது குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல தேர்வுகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் பல லட்சம் இளைஞர்கள் இந்த தேர்வுக்குத் தயார் ஆவார்கள்.
க்ரூப் 4: குறிப்பாக க்ரூப் 4 தேர்வைப் பலரும் எதிர்நோக்கிக் காத்து இருப்பார்கள். க்ரூப் 4க்கு டிகிரி எதுவும் தேவையில்லை.. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தாலே போதும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேர் க்ரூப் 4 தேர்வை எழுதுவார்கள். அதன்படி இந்தாண்டு விஏஓ, வனக் காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட காலியிடங்கள் நிரப்பத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வை சுமார் 15.80 லட்சம் பேர் எழுதினர். விடைத்தாள்கள் திருத்தம் பணி துரிதமாக நடந்த நிலையில், கடந்த அக். 28ம் தேதி க்ரூப் 4 தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. முதலில் 8,932 குரூப் 4 காலிப் பணியிடங்களை நிரப்பத் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் 559 பணியிடங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டு, மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 9,491ஆக உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
சான்றிதழ் சரிபார்ப்பு: தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இப்போது அடுத்த கட்டமாகச் சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வை எழுதிய விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் அக்டோபர் 28ம் தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு (Onscreen Certificate verification) மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீடு விதி, காலி பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் இன்று (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட ஆறு வேலை நாட்களில் இப்பட்டியல் விரைவாக வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களது தங்கள் சான்றிதழ்களை நவம்பர் 9 முதல் 21ம் தேதி வரை தேர்வாணையத்தின் இணையதளத்தின் ஒருமுறை பதிவு பிரிவு (One Time Registration Platform) வாயிலாகப் பதிவேற்றம் செய்யலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications