டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே.. இது ரொம்ப முக்கியம்! குரூப் 2, 2A தேர்வுகளுக்கு சிலபஸ் மாறிடுச்சு!
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழக அரசு துறைகளில் பல்வேறு பதவிகளை நிரப்ப டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம், ஆண்டுத்தோறும் தேர்வு அட்டவணையை வெளியிடும். தொடர்ந்து, அதில் மாற்றங்களையும் செய்து வருகிறது.

6,244 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 1ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வுகள் ஜூன் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி 29 பணியிடங்களுக்கான குரூப் 1பி, 1சி தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வுகள் ஜூலை 12ஆம் தேதி நடைபெறுகிறது.
மேலும், கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி 90 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் 2,030 பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வரும் ஜூன் மாதம் 28 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதன்பிறகு குரூப் 2, குரூப் 2 ஏ பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வு செப்டம்பர் 28 ல் நடைபெறுகிறது.
இந்நிலையில் குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வுகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டதை வெளியிட்டு உள்ளது டிஎன்பிஎஸ்சி. தேர்வர்கள், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் புதிய பாடத்திட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் -2, 2ஏ தேர்வுக்கு தனித்தனியே முதன்மை தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2024ஆம் ஆண்டிற்கான திருத்தியமைக்கப்பட்ட தேர்வுக்கால அட்டவணை 24.4.2024 இல் வெளியிட்டபோது தேர்வர்களின் நலன் கருதி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு மற்றும் தேர்வுக்கு தனித்தனியே முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுகள் முதன்மை எழுத்துத் தேர்விற்கான மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டமும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2ஏ-இன் முதன்மைத் புதிய பாடத்திட்டமும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டம்: https://www tnpsc.gov.in/English/syllabus.html
தேர்வுத் திட்டம்: https://www.tnpsc.gov.in/English/scheme.html எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டம்: குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி, தமிழ் தகுதி தாளும், பொது அறிவு தாளும் விரிவாக விடையளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வு மதிப்பெண்ணில் பாகுபாடு.. பொங்கிய பாமக நிறுவனர் ராமதாஸ்
குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வில், தமிழ் தகுதி தாள் மட்டும் விரிவாக விடை அளிக்கும் வகையிலும், பொது அறிவு தாள் கொள்குறி முறையில் விடையை தேர்வு செய்யும் வகையிலும் புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
பொது அறிவுத்தாளில், 50 சதவிகித வினாக்கள் பட்டப்படிப்பு தரத்திலான பொது அறிவு சார்ந்தும், 20 சதவிகித வினாக்கள் பத்தாம் வகுப்பு தரத்திலான கணக்கும், 30 விழுக்காடு வினாக்கள் பத்தாம் வகுப்பு தரத்திலான பொது ஆங்கிலம் அல்லது பொது தமிழில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2,300 காலிப்பணியிடங்கள் கொண்ட குரூப்-2 மற்றும் குரூப் 2 ஏ-க்கான தேர்வு அறிவிப்பு ஜூன் 28ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதற்கு முன்னதாக புதிய பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications