நாளை நடைபெறும் TNPSC குரூப் 4 தேர்வு வினாத்தாள் கசிந்ததா? டிஎன்பிஎஸ்சி தலைவர் பரபர விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை என டிஎன்பிஎஸ்சி தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 314 தேர்வு மையங்களில் நாளை நடைபெறும் குரூப் 4 தேர்வினை மொத்தம் 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 தேர்வர்கள் எழுத உள்ளனர்.

TNPSC Chief Clarifies No Leak of Group 4 Exam Question Paper

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வனக் காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை உதவியாளர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட 3,935 பணி இடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு நாளை நடைபெறுகிறது.

இதற்காக, கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முதற்கட்டமாக எழுத்து தேர்வு நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. நாளை காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் உள்ள 314 மையங்களில் நாளை தேர்வு நடைபெறுகிறது. இந்த போட்டித் தேர்வை ஆண்கள், 5,26,553 பேர், பெண்கள் 8,63,068 பேர், 117 மூன்றாம் பாலினத்தவர்கள் என 13,89,738 பேர் எழுத உள்ளனர். குரூப் 4 தேர்வு பணிகளுக்கு 13,89,743 பேர் விண்ணப்பித்த நிலையில், 5 பேரின் விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளன.

வினாத்தாள் அனுப்பும் பணி

தேர்வு கண்காணிப்பாளர்களாக 4922 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 94,848 பேர் தேர்வு எழுத உள்ளனர். குரூப் 4 தேர்வையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்களை அனுப்பும் பணி இன்று நடைபெற்றது. அதேபோல் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் இருந்தும் வினாத்தாள்கள் தனியார் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வினாத்தாள் கசிந்ததா? - டிஎன்பிஎஸ்சி விளக்கம்

கண்டெய்னர் வாகனங்களுக்கு பதிலாக தனியார் பேருந்துகளில் அனுப்பப்படுவதால் வினாத்தாள்கள் கசிய அதிக வாய்ப்பு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர், "டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் பாதுகாப்பாகக் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. எந்தவொரு வினாத்தாள்களும் கசியவில்லை. தேர்வர்கள் அச்சப்படத் தேவையில்லை. மதுரையில் தனியார் பேருந்துகள் மூலம் வினாத்தாளை எடுத்துச் சென்றது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது. இருப்பினும் வினாத்தாள்கள் பேருந்துகள் மூலம் எடுத்துச் செல்லும்போது காவல்துறையினர் பாதுகாப்புடன் தான் வினாத்தாள்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

தேர்வர்கள் செய்ய வேண்டியவை

நாளை தேர்வு துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக தேர்வர்கள் தேர்வு அறையில் இருக்க வேண்டும். எனவே, தேர்வு மையங்கள் எங்கெங்கு அமைக்கப்பட்டுள்ளன என்பதை முன்கூட்டியே தேர்வர்கள் அறிந்து கொள்ள வேண்டும். போட்டித் தேர்வு எழுதுவோர், தேர்வறைக்குள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்களை தேர்வர்கள் எடுத்துச் செல்லக் கூடாது. தேர்வு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வினாத்தாள் எப்படி இருக்கும்?

குருப் 4 பணிக்கான தேர்வில் பகுதி 1 ல் தமிழ் மொழித் திறனை அறிவதற்கான தேர்வில் 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகளும், பகுதி 2 ல் பொது அறிவு பிரிவில் 75 கேள்விகளும், திறனை சோதிக்கும் வகையில் 25 கேள்விகள் என 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் கேட்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+