ஆமா.. நிறைய பேருக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரிசல்ட் வரவில்லையே ஏன்.. வெளியான "முக்கிய" காரணம்!
சென்னை: தமிழ் தகுதித் தேர்வில் 5 லட்சம் பேர் தோல்வியடைந்ததால், பலருக்கு குரூப் - 4 முடிவு வெளியாகவில்லை என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. குரூப் - 4 தமிழ் தகுதித் தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு விடைத்தாள் திருத்தப்படும் என்று முதல்முறையாக கொண்டு வந்துள்ளது.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி நடைபெற்றது.
மொத்தம் 18 லட்சத்து 36,535 பேர் குரூப் -4 தேர்வை எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது.

குரூப் - 4 தேர்வு
இதற்கிடையே, அரசுப் பணிகளில் மகளிருக்கான இடஒதுக்கீட்டு விதிகளில் உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்த கூடுதல் அவகாசம் தேவைப்பட்டதால், குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. வழக்கமாக 2 அல்லது 3 மாதங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகிவிடும்.

8 மாதங்கள் தாமதம்
ஆனால் இந்த முறை 8 மாதமாகியும் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் சர்ச்சை எழுந்தது. சமூக வலைத்தளங்களில் பலரும் அதிருப்தி தெரிவித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் இதுகுறித்த ஹேஷ்டேக் ட்விட்டரில் வைரலானது. இதையடுத்து, இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

முடிவுகள் வெளியீடு
மேலும், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நியமனம் செய்யப்பட வேண்டிய பணியிடங்களின் எண்ணிக்கை 7,381-லிருந்து 10,117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இந்நிலையில், மார்ச் 24ஆம் குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இதன்படி முடிவுகள் வெளியிடப்பட்டது.

தேர்வர்கள் அளித்த புகார்
இதனிடையே குரூப் - 4 தேர்வை ஒரே மையத்தில் எழுதிய 2 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றதால், தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதுமட்டுமல்லாமல் குரூப் - 4 தேர்வு எழுதிய தேர்வர்கள் லட்சக்கணக்கானவர்கள் தங்களது முடிவுகளை அறிய முடியவில்லை என்று புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி விளக்கம்
அதில், குரூப் - 4 தேர்வில் தமிழில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொதுஅறிவு விடைத்தாள் திருத்தப்படும் என்றும், குரூப்-4 தமிழ் தகுதித் தேர்வில் சுமார் 5 லட்சம் பேர் தேர்ச்சி பெறவில்லை. தமிழ் தகுதித் தேர்வில் தேர்சி பெறாததால் பலரின் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றால் மட்டுமே பொது அறிவு விடைத்தாள் திருத்தப்படும் என்று விதி முதல்முறையாக கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications