குரூப் 2, 2 ஏ தேர்வு: டிஎன்பிஸ்சி தந்த சர்ப்ரைஸ்.. 57 நாட்களில் ரிசல்ட் வெளியீடு! உடனே செக் பண்ணுங்க
சென்னை: குரூப் 2, 2 ஏ தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 2,327 காலி பணியிடங்களுக்கான குரூப் 2, 2 ஏ தேர்வை சுமார் 5.8 லட்சம் பேர் எழுதினர். செப்டம்பர் 14 ஆம் தேதி தேர்வு நடைபெற்ற நிலையில், 57 நாட்களுக்குள் தேர்வு முடிவை டிஎன்பிஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை தேர்வர்கள் tnpscresults.tn.gov.in மற்றும் tnpscexmas.in -என்ற வெப்சைட்டில் அறியலாம்.
தமிழக அரசு துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. குரூப் 1 முதல் குரூப் 4 வரை என பல்வேறு நிலைகளில் உள்ள காலிப்பணியிடங்களை டிஎஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது.

அந்த வகையில், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப் 2 பதவிகளுக்கு 507 காலி பணியிடங்களும், உதவியாளர், தணிக்கை ஆய்வாளர், முழுநேர விடுதி காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், நேர்முக எழுத்தர், கணக்கர் உள்ளிட்ட பல்வேறு குரூப்பு 2 ஏ பதவிகளில் சுமார் 1820 காலி பணியிடங்கள் என மொத்தமாக 2327 காலி பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கான தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி நடைபெற்றது. பட்டப்படிப்பு தகுதி கொண்ட இந்த குரூப் 2, 2 ஏ தேர்வுகளை சுமார் 5 லட்சம் பேர் எழுதியிருந்தனர். தேர்வு நடைபெற்று 57 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இன்று இந்த தேர்வு முடிவினை வெளியிட்டு டிஎன்பிஎஸ்சி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. குரூப் 2, 2 ஏ தேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவுகளை tnpscresults.tn.gov.in மற்றும் tnpscexmas.in -என்ற வெப்சைட்டில் அறிந்து கொள்ளலாம்.
இன்று வெளியான குரூப்-2, 2 ஏ தேர்வு முடிவில் 29,790 தேர்வர்கள் தேர்ச்சி பெற்று இருப்பது தேர்வு முடிவு புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரிய வந்து இருக்கிறது. இதில் குரூப்-2 பதவிகளுக்கு 7,987 பேரும், 2ஏ பதவிகளுக்கு 21, 803 பேரும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக முதன்மை தேர்வை எதிர்கொள்ள வேண்டும். அந்த வகையில் அதற்கு வரும் சனிக்கிழமை முதல் 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
குரூப்-2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான தமிழ் தகுதித்தாள் தேர்வு அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் என்றும், குரூப்-2ஏ பதவிகளுக்கு கொள்கைகுறி வகையிலான கணினி வழி பொதுப் பாடத் தேர்வு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதியும், குரூப்-2 பதவிகளுக்கு விரித்துரைக்கும் வகையிலான பொதுப்பாடத் தேர்வு 25 ஆம் தேதியும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி விரைவாக வெளியிட தொடங்கியிருப்பது தேர்வர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. தமிழகத்தில் அரசு பணிகளுக்கு தயார் ஆகும் இளைஞர்கள் பெரிதும் நம்பியிருப்பது தமிழக அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் குரூப் தேர்வுகளைத்தான்.
அரசு பணி கனவுகளுடன் பல லட்ச்கணக்கான போட்டி தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். தேர்வர்கள் போட்டி தேர்வுகளுக்கு தயார் ஆக வசதியாக ஆண்டு கால அட்டவணையும் டிஎன்பிஎஸ்சி வெளியிடுகிறது. வரும் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி அண்மையில் வெளியிட்டது. அதன்படி, அடுத்த ஆண்டு குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி தேர்வு நடைபெறும்.
தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காணப்படும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியாகும். தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடைபெறும். ஒருங்கிணைந்த டெக்னிக்கல் பணிகளுக்கான (நேர்முகத்தேர்வு) அறிவிப்பு மே 7 ஆம் தேதி வெளியிடப்பட்டு ஜூலை 21 ஆம் தேதி தேர்வு நடைபெறும். குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்பட்டு செப்டம்பர் 28 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. நாளை ஆன்லைனில் இண்டர்வியூ! எச்சிஎல் தரும் சூப்பர் வேலை -
AIIMS Jobs: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை! 2,668 காலியிடங்கள்! 10 டூ டிகிரி போதும்.. தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications