டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு: பிப்.23ல் விண்ணப்பம்... மே 21ல் தேர்வு - ஆதார் அவசியம்
குரூப் 2 தேர்வு, குரூப் 2 ஏ தேர்வுகளுக்கு பிப்ரவரி 23 முதல் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
சென்னை: டிஎன்பிஎஸ் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் வரும் மே 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி முதல் மார்ச் 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் போட்டி தேர்வுகள் ,நேர்காணல் தேர்வுகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகள் உள்ளன.
இந்நிலையில் அரசு துறைகளுக்கு ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை தேர்வு செய்ய நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் புதிய பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்ற விவரம் முன்கூட்டியே திட்ட அறிக்கையாக வெளியிடப்படும். அதன்படி 2022ஆம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள பணி நியமனங்கள் போட்டித் தேர்வுகள் மற்றும் தேர்வு விதிமுறைகள் குறித்த திட்ட அறிக்கை கடந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டது.

பிப்.23 முதல் விண்ணப்பிக்கலாம்
டிஎன்பிஎஸ் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதற்கான அறிவிப்பை தேர்வுத்துறைத் தலைவர்
பாலச்சந்திரன் வெளியிட்டுள்ளார். வரும் 23ஆம் தேதி தேர்வுகாண விண்ணப்பங்கள் வெளியிடப்படும் என்று கூறினார். மார்ச் 23ஆம் தேர்வுகான விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாளாகும் என்றும் கூறினார். தேர்வுகள் மே 21ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று கூறினார்.

ஜூன் மாதம் ரிசல்ட்
குரூப் 2, குரூப் 2 ஏ மூன்று கட்டங்களாக நடைபெறும் என்றும் கூறினார். மே 21ஆம் தேதி நடைபெறும் முதற்கட்ட தேர்வுக்கான ரிசல்ட் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்றும் முதன்மை எழுத்துத்தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் பாலச்சந்திரன் கூறினார். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கலந்தாய்வு நடைபெறும் பாலச்சந்திரன் கூறினார்.

எந்தெந்த பதவிகள்
காலியிடங்கள் மொத்தம் இன்டர்வியூ போஸ்ட் 116 இடங்களாகவும் நேர்முகத்தேர்வு அல்லாமல் 5413 காலியிடங்களும் உள்ளன. பத்திர பதிவுதுறையில் சப் ரிஜிஸ்டர் பதவிக்கு 17 காலி பணியிடங்கள் உள்ளன. தொழிலாளர் நலத்துறையில் அசிஸ்டெண்ட் இன்ஸ்பெக்டர் ஆப் லேபர் பதவிக்கு 19 காலி பணியிடங்களும் உள்ளன. முதல்முறையாக காவல்துறையில் ஸ்பெஷல் பிராஞ்ச் அசிஸ்டென்ட் என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது. 58 பேர் இந்த குரூப் 2 மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்கள் அனைவரும் இன்டர்வியூ முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்

ஆதார் எண் அவசியம்
குரூப் 2 ரெவின்யூ டிபார்ட்மென்டில் 462 பதவிகளும், கிராமப்புற மேம்பாடு பதவிக்கு 336 அசிஸ்டெண்ட்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பம் செய்பவர்கள் ஆதார் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

32 வயது வரை விண்ணப்பிக்கலாம்
தமிழகம் முழுவதும் 117 மையங்களில் தேர்வுகள் நடைபெறும். டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் காலை 10 மணிமுதல் பிற்பகல்1 மணி வரை நடைபெற்ற நிலையில் இனி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் நடைபெறும் தேர்வு நேரத்தில் மாற்றங்கள் ஏதுமில்லை என்றும் மாலை 2 மணி முதல் 5 மணிவரை எழுதலாம். 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வாணையத்தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications