ஒரே சான்ஸ்.. குரூப் - 4 தேர்வு.. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
சென்னை: குரூப் 4 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு குறித்து டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 என ஏராளமான அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொடர்ந்து நடத்தி வருகிறது.
அதன்படி, தமிழ்நாடு அரசு துறைகளில் கிராம நிர்வாக அதிகாரிகள், இளநிலை உதவியாளா்கள், தட்டச்சர் உள்ளிட்ட 7 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான தேர்வை டிஎன்பிஎஸ்சி கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி நடத்தியது.

இளநிலை உதவியாளர்
இதன் முடிவுகள், அதே ஆண்டு வெளியானது.. இதையடுத்து, இந்த பணியிடங்களின் எண்ணிக்கை 9,882 ஆக அதிகரிக்கப்பட்டது... மேலும், நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பாளா் உள்ளிட்ட பணிகளுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் 17-ம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்பட்டது.

கலந்தாய்வு
அதில் மொத்தமுள்ள 6,007 பணியிடங்களில் 5,798 இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், 209 இளநிலை உதவியாளா் பணியிடங்கள் மட்டும் நிரப்பப்படவேயில்லை... அதேபோல், கடந்த நவம்பர் 2 முதல் டிசம்பர் 9-ம் தேதி வரை நடத்தப்பட்ட தட்டச்சர் பணிக்கான கலந்தாய்வில் மொத்தம் 221 இடங்கள் நிரப்பப்படவில்லை. இளநிலை உதவியாளா்கள், தட்டச்சர்கள் என காலியாக இருக்கும் 430 பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறாமல் இருந்து வந்தது.

அறிவிப்பு
இந்நிலையில்தான், 3-ம் கட்ட கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், இளநிலை உதவியாளர், நில அளவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கு வரும் 25-ம் (25-11-2021) தேதி சென்னை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது என்றும், சான்றிதழ் மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்பு கடிதத்தினை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டவட்டம்
மேலும், கலந்தாய்வு அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது என்று திட்டவட்டமாகவும் அறிவித்துள்ளது.. இது தொடர்பான தற்காலிக பட்டியல் தேர்வாணைய வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் பங்கேற்க தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்படாது என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதையடுத்து, விரைவில் குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ போட்டித் தேர்விற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications