டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு.. விண்ணப்பிக்க போறவங்களுக்கு புதுமையாக அலார்ட்
சென்னை: வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு வரும் செப்டம்பர் 1-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குரூப் -4 தேர்வுக்கு ஜுலை 14 முதல் http://www.tnpsc.gov.in/ என்ற டிஎன்பிஎஸ்சி இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணிகள்தேர்வு வாரியம் தமிழக அரசு பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களூக்கு குரூப் 1, குரூப்2. குரூப்4 மற்றும் மருத்துவ பணியிடங்கள் மற்றும நீதித்துறை பணியிடங்கள் உள்பட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. இதற்கான அறிவிப்புகள் முறைப்படி டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியாகி வருகிறது.

இதன்படி, வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு வரும் செப்டம்பர் 1-ந்தேதி நடக்க உள்ளது.இந்த தேர்வில் பங்கேற்பதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜுலை 14ம் தேதி முதல் http://www.tnpsc.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துளளது.
விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட ஒவ்வொரு பணிகளுக்கும் எவ்வளவு காலி பணியிடங்கள் உள்ளது? இதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் http://www.tnpsc.gov.in/ இணையதளத்தில் ஜூலை 14-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக தயாராக வேண்டும் என்ற அடிப்படையில் தற்போது தேர்வு தேதி மற்றும் விண்ணப்பிக்கும் நாள் ஆகிய விவரங்கள் மட்டும் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வை 17 லட்சம் பேர் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications