முட்டையை வச்சு குழப்பிட்டாங்களே.. இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா? சவால்!
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்பட்ட முட்டை தொடர்பான கேள்வி ஒன்று பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 6624 க்ரூப் 4 காலியிடங்களை நிரப்பவே இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடந்த 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியுள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்குத்தான் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடந்தது.
கேள்வி: Kayal bought 5 dozen eggs. Out of that 45 eggs are good eggs. Express the number of rotten eggs in percentage.
(A) 45%
B) 35%
(C) 25%
(D) 15%
(E) Answer not known
கயல் 5 டஜன் முட்டைகளை வாங்கினாள். அதில் 45 முட்டைகள் நல்ல முட்டைகள். அழுகிய முட்டைகளின் எண்ணிக்கையை சதவீதத்தில் குறிப்பிடவும் .
(A) 45%
B) 35%
(C) 25%
(D) 15%
(E) பதில் தெரியவில்லை
பதில்:
மொத்த முட்டைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுங்கள்:
கயல் 5 டஜன் முட்டைகளை வாங்கினாள்.
ஒரு டஜன் 12 முட்டைகளுக்கு சமம்.
முட்டைகளின் மொத்த எண்ணிக்கை = 5×12=60 முட்டைகள்.
அழுகிய முட்டைகளின் எண்ணிக்கையை தீர்மானிக்கவும்:
60 முட்டைகளில் 45 நல்ல முட்டைகள்.
அழுகிய முட்டைகளின் எண்ணிக்கை = மொத்த முட்டைகள் - நல்ல முட்டைகள்.
அழுகிய முட்டைகளின் எண்ணிக்கை = 60-45=15 முட்டைகள்.
அழுகிய முட்டைகளின் சதவீதத்தைக் கணக்கிடுங்கள்:
அழுகிய முட்டைகளின் சதவீதம் = (அழுகிய முட்டைகளின் எண்ணிக்கை/ மொத்த முட்டைகளின் எண்ணிக்கை) × 100 %
அழுகிய முட்டைகளின் சதவீதம் = (15/60)× 100 %
கணக்கீட்டைச் செய்வோம்:
(15/60) × 100 % = 0.25×100%=25%
இதனால், அழுகிய முட்டைகளின் சதவீதம் 25%
எனவே பதில்: 25%
தேர்வு விவரம் : டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சியில் குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு பணிகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.
6,244 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வை 20 லட்சம் பேர் வரை எழுதினர். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளார்க்- 3 உள்ளிட்ட பல பணிகளுக்கான தேர்வு நடந்தது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications